லூயிஸ் டி கமோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூயிஸ் வாஸ் டி கமோஸ்
Luís Vaz de Camões
பிறப்பு1524 (அண்.)
இறப்பு(1580-06-10)சூன் 10, 1580
லிஸ்பன், போர்த்துக்கல்
தொழில்எழுத்தாளர்
வகைகவிதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஒஸ் லுசியாடாஸ்

லூயிஸ் வாஸ் டி கமோஸ் (Luís Vaz de Camões, உச்சரிப்பு: லூயிஸ் வாஸ் டா கமொயிஷ், 1524 - ஜூன் 10, 1580) போர்த்துக்கல் நாட்டின் பெரும் கவிஞராக மதிக்கப்படுகிறார். இவருடைய பாடல் வரிகளை எழுதுவதில் இவருக்கு உள்ள வல்லமை, ஷேக்ஸ்பியர், ஹோமர், வர்கில், தான்டே ஆகியோருடன் ஒப்பிட்டு நோக்கப்படுகின்றது. இவர் போர்த்துக்கேய மொழியிலும், ஸ்பானிய மொழியிலும் பல இசைப் பாடல்களையும், நாடகங்களையும் எழுதியுள்ளார் எனினும், இவரது இதிகாசமான ஒஸ் லுசியாடாஸ் பெரிதும் புகழ் பெற்றது. இவருடைய மெய்யியல் ஆக்கமான The Parnasum of Luís Vaz தொலைந்துவிட்டது. இதுவும் ஒஸ் லூசியாடாசின் ஒரு பகுதியும் இவர் மொசாம்பிக் நாட்டுக்குச் சென்றிருந்தபோது, இவரது எதிரிகளால் திருடப்பட்டுவிட்டது.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. "The Lusiads". World Digital Library. 1800–1882. பார்க்கப்பட்ட நாள் 2013-09-02.{{cite web}}: CS1 maint: date format (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிஸ்_டி_கமோஸ்&oldid=2209678" இலிருந்து மீள்விக்கப்பட்டது