லூயிசு டி புனெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லூயிசு ஜெர்மைன் டேவிட் டி புனசு டி கலர்ஸா ( பிரெஞ்சு உச்சரிப்பு: ​[lwi ʒɛʁmɛ̃ david də fynɛs də ɡalaʁza]  ; [1] 31 ஜூலை 1914 – 27 ஜனவரி 1983) ஒரு பிரெஞ்சு நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். 1968 முதல் நடத்தப்பட்ட பல கருத்துக் கணிப்புகளின்படி அவர் பிரான்சின் விருப்பமான நடிகராக இருந்துள்ளார். 130 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 100 க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்தார். [2]

இத்தாலி, கிரீஸ், ஹங்கேரி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, பெல்ஜியம், செர்பியா, போலந்து, பல்கேரியா, ஜெர்மனி, ஸ்பெயின், துருக்கி, அல்பேனியா, ருமேனியா, குரோஷியா, சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் நாடுகள் போன்ற பல நாடுகளிளும் இவர் பரவலாக அறியப்பட்டார். ஆனால் தற்போது வரை ஆங்கிலம் பேசும் நாடுகளில் இவர் அறியப்படாமல் உள்ளார்.1974 ஆம் ஆண்டில் வெளியான தி மேட் அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ரப்பி ஜேக்கப் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இளமைக் காலம்[தொகு]

லூயிஸ் டி புனசு 31 ஜூலை 1914 இல் பிறந்தார். இவரது பெற்றோர்கள் செவீயா, ஸ்பெயின் வம்சாவளையினைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் குடும்பங்கள் அவர்களது திருமணத்தை எதிர்த்ததால், அவர்கள் 1904 இல் பிரான்சுக்கு குடிபெயர்ந்தனர். அவரது தந்தை, கார்லோஸ் லூயிஸ் டி ஃபுனெஸ் டி கலர்ஸா, அவரது தாயார் கவுண்ட்ஸ் டி கலார்ஸாவினையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர்.

நண்பர்களும் நெருங்கிய உறவினர்களும் இவரை "ஃபுஃபு" என்று அழைத்தனர். டி புனெசு பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய முன்று மொழிகளையும் பேசும் திறன் கொண்டவராக இருந்தார். தனது இளமை பருவத்தில் பியானோ வாசிப்பதனை மிகவும் விரும்பினார். அவர் பாரிஸில் லைசீ கான்டோர்செட்டில் கல்வி கற்றார். பின்னர் அவர் வெளியேறினார், தனது ளமைக் காலங்களில் இவர் பல பனிகளைச் செய்தார். அனைத்துப் பணிகளில் இருந்தும் சிறிது காலத்திலேயே நீக்கப்பட்டார். இவர் பாரிசின் பிகலேவில் உள்ள விடுதிகளில் பியானோ வாசிக்கும் பணியில் இருந்தார். அவர் சைமன் நடிப்பு பள்ளியில் ஒரு வருடம் கல்வி பயின்றார். அங்கு அவர் டேனியல் கெலின் எனபவருடன் நட்பினை ஏற்படுத்தினார். 1936 ஆம் ஆண்டில், அவர் ஜெர்மைன் லூயிஸ் எலோடி கரோயர் என்பவரை மணந்தார். இந்தத் தம்பதிக்கு டேனியல் எனும் ஒரு குழந்தை இருந்தது.1942 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தத் தம்பதி விவாகரத்து பெற்றது. தனது தோற்றம் கொண்ட ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது என நினைத்தார். ஆனால் இவரது மனைவி இவருக்கு ஊக்கம் தந்தார். இவரது மனைவி இவரது மிகவும் கடினமான தருணங்களில் இவரை ஆதரித்தார் மற்றும் இவரது வாழ்க்கையை திறமையாக நிர்வகிக்க உதவி புரிந்தார்.

விருது[தொகு]

130 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள இவர், 1974 ஆம் ஆண்டில் வெளியான தி மேட் அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ரப்பி ஜேக்கப் திரைப்படத்திற்காக கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

சான்றுகள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிசு_டி_புனெசு&oldid=2892623" இருந்து மீள்விக்கப்பட்டது