லூயிசா குஸ்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லூயிசா குஸ்டா
Luisa Cuesta.png
பிறப்புசொரியானோ துறை Edit this on Wikidata
இறப்பு21 நவம்பர் 2018 Edit this on Wikidata
பணிமனித உரிமை செயற்பாட்டாளர் edit this on wikidata

மரியா லூயிசா குஸ்டா விலா (Maria Luisa Cuesta Vila) (பிறப்பு: 1920 மே 26 சொரியானோ - இறப்பு: 2018 நவம்பர் 21 மொண்டேவீடியோ [1] ) இவர் உருகுவேய மனித உரிமை ஆர்வலர் ஆவார். உருகுவே இராணுவ சர்வாதிகாரத்தின் போது காணாமல் போன கைதிகளைத் தேடுவதற்காக இவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவரது மகன் நெபியோ மெலோ குஸ்டா அந்தக் காலகட்டத்தில் காணாமல் போனார். இன்றும் கிடைக்கப்பெறவில்லை.

வாழ்க்கை[தொகு]

இவர் சொரியானோவில் பிறந்தார். அங்கு இவர் ஜூன் 1973 வரை ஒரு தாள் மற்றும் வண்ணப்பூச்சு பட்டறையில் பணியாற்றினார். 1973 சூன் 28, அன்று முதல் 1974 சனவரி 31, வரை இவர் காலாட்படை பட்டாலியன் எண் 5 இல் சிறையில் அடைக்கப்பட்டார். [2] இவரது மகன், நெபியோ மெலோ குஸ்டா, தனது மனைவி மற்றும் மகளுடன் அர்ஜென்டினாவில் நாடுகடத்தப்பட்டார். 1976ஆம் ஆண்டில், நெபியோ புவெனஸ் அயர்ஸில் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போனார். [3] [1] இது 1973-1985 கால உருகுவேய சர்வாதிகார காலத்தில் நடைபெற்றது.

குஸ்டா 1977இல் தனது குடும்பத்தினருடன் நெதர்லாந்திற்கு குடிபெயர்ந்தார். ஆட்சி முடிவடைந்து புதிய ஜனநாயக தேர்தல் நடைபெற்ற பின்னர் 1985இல் இவர் திரும்பி வந்தார். [1] அடுத்த ஆண்டுகளில், உருகுவேய சர்வாதிகாரத்தின் போது காணாமல் போன மக்கள் குடும்பங்களின் குழுவை இவர் வழிநடத்துகிறார். [3] [4] உருகுவேயில் ஆண்டுதோறும் மௌனமாக நூற்றுக்கணக்கானவர்களைக் ஊர்வலமாகக் கூட்டிச் செல்வது இவரது நடவடிக்கைகளில் ஒன்றாகும். [5] 2012ஆம் ஆண்டில் மொன்டேவீடியோ நகராட்சியால் இவருக்கு இல்லஸ்டிரியஸ் சிட்டிசன் என்ற தலைப்பு வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் இவர் செய்த பங்களிப்புக்காக இவருக்கு குடியரசு பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஹானோரிஸ் கௌசா பட்டத்தைப் பெற்றார்.

காசவல்லில் உள்ள ஒரு குடிமை மையம் 2015ஆம் ஆண்டில் இவரது பெயரில் திறக்கப்பட்டது, இன்றும் இவரது பெயரைத் தொடர்ந்து கூறி வருகிறது. [1] [6] அதே ஆண்டு இவர் ஒரு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். மார்ச் 20இல் நடைபெற்ற மௌன ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிசா_குஸ்டா&oldid=2934376" இருந்து மீள்விக்கப்பட்டது