லூசி மௌட் மாண்ட்கோமெரி
லூசி மௌட் மாண்ட்கோமெரி Lucy Maud Montgomery | |
---|---|
![]() 1935 இல் மாண்ட்கோமெரி | |
தொழில் | புதின எழுத்தாளர் |
நாடு | கனடியர் |
கல்வி | பிரின்சு ஒஃப் உவேல்சு கல்லூரி, டால்கவுசி பல்கலைக்கழகம் |
எழுதிய காலம் | 1890–1940 |
இலக்கிய வகை | கனடிய இலக்கியம், சிறுவர் இலக்கியம், சிறுகதை, கவிதை |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
|
துணைவர்(கள்) | எவன் மெக்டொனால்ட் (தி. 1911; இற. 1943) |
பிள்ளைகள் | செசுட்டர் (1912–1963) இயூ (1914–1914) இசுட்டுவர்ட் (1915–1982) |
லூசி மௌட் மாண்ட்கோமெரி (Lucy Maud Montgomery, நவம்பர் 30, 1874 ஏப்ரல் 24, 1942), எல். எம். மாண்ட்கோமெரி என்ற பெயரில் எழுதியவர் ஒரு கனடிய எழுத்தாளர் ஆவார். இவரின் 1908 ஆம் ஆண்டைய ஆன் ஆஃப் கிரீன் கேபிள்ஸ் என்ற தொடர் புதினங்களுக்காக மிகவும் பிரபலமடைந்தார். இந்த புத்தகம் உடனடியாக வெற்றி பெற்றது. ஆன் ஷெர்லி என்ற அனாதைப் பெண் கதாபாத்திரம் மாண்ட்கோமரியை அவரது வாழ்நாளில் பிரபலமாக்கி, அவருக்கு பன்னாட்டு அளவில் வாசகர்களைப் பெற்றுக் கொடுத்தது.[1]
இவரது முதல் புதினத்தைத் தொடர்ந்து ஆன்னை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு \தொடர்ச்சியாக தொடர் நூல்கள் வெளிவந்தன. மாண்ட்கோமெரி 20 புதினங்களையும் 530 சிறுகதைகள், 500 கவிதைகள் மற்றும் 30 கட்டுரைகளையும் வெளியிட்டார். பெரும்பாலான புதினங்கள் இளவரசர் எட்வர்ட் தீவு கதைக் களமாக அமைக்கப்பட்டது, இதனால் கனடாவின் மிகச்சிறிய மாகாணத்திற்குள் உள்ள இடங்களான கிரீன் கேபிள்ஸ் பண்ணை, பிரின்ஸ் எட்வர்ட் தீவு தேசிய பூங்கா போன்றவை ஒரு இலக்கிய அடையாளமாகவும் பிரபலமான சுற்றுலாத் தளங்களாகவும் மாறின. இவர் 1935 இல் பிரித்தானியப் பேரரசின் ஆணைக்கான அதிகாரி கௌரவத்தைப் பெற்றார் .
மாண்ட்கோமரியின் படைப்புகள், நாட்குறிப்புகள் மற்றும் கடிதங்கள் உலகளவில் அறிஞர்கள் மற்றும் வாசகர்களால் படித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Lucy Maud Montgomery and Anne". Island Information. Government of Prince Edward Island. May 6, 2010. March 6, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "L.M. Montgomery Institute". University of Prince Edward Island. ஏப்ரல் 5, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 6, 2013 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Montgomery at The Canadian Encyclopedia, accessed September 5, 2019
- The Canadian Encyclopedia, Lucy Maud Montgomery
- Lucy Maud (Montgomery) MacDonald O.B.E. (1874 - 1942) at WikiTree