லூசி உம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூசி உம்மன்
Lucy Oommen
பிறப்புகேரளம், இந்தியா
இறப்புமார்ச்சு 2002
பணிமகளிர் மருத்துவம்
செயற்பாட்டுக்
காலம்
1942-1988
அறியப்படுவதுமருத்துவ நிர்வாகம்
பெற்றோர்பி. கே. உம்மன்
கோச்சன்னம்மா
விருதுகள்பத்மசிறீ

லூசி உம்மன் (Lucy Oommen) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணராவார்[1] புது தில்லியிலுள்ள புனித சிடீபன் மருத்துவமனையில் இந்திய வம்சாவளியின் முதல் மருத்துவ இயக்குனராக பணி புரிந்தார். யாக்கோபு உம்மன் ஆலிசு ஆகிய சகோதரிகள் கொண்ட ஏழைக்குடும்பத்தில் பி.கே. உம்மன், கோச்சம்மா தம்பதியருக்கு மகளாக லூசி பிறந்தார்.[2] வேலூரிலுள்ள கிரித்துவ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் லூசி மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.[3] 1942 ஆம் ஆண்டு புது தில்லி புனித சிடீபன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியில் சேர்ந்தார்.[4] பின்னர் மருத்துவர் மோரிசிடமிருந்து கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். [5]

சாதனைகள்[தொகு]

புனித சிடீபன் நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்த முதல் இந்தியர் என்ற சிறப்புக்கு உரியவரானார். 1988 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெறும் வரை அந்தப் பதவியை வகித்தார். [4] இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது 1977 ஆம் ஆண்டு லூசிக்கு வழங்கப்பட்டது.[6] தாய் மற்றும் குழந்தை பராமரிப்பில் சிறந்து விளங்கியதற்காக புனித சிடீபன் மருத்துவமனையும் 2005 ஆம் ஆண்டில் மருத்துவர் லூசி உம்மன் விருதை உருவாக்கி வழங்கியது [7] [8] புதுதில்லியில் உள்ள பிரபல மகளிர் மருத்துவ நிபுணர் சாரதா ஜெயினுக்கு முதல் மருத்துவர் லூசி உம்மன் விருது வழங்கப்பட்டது. [9] சாரதா தொடங்கிய சமூகப் பணி உட்பட மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் பணியாற்றியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. மருத்துவர் லூசி தனது கல்லூரி காலத்தின் போது அந்த ஆண்டிற்கான தங்கப் பதக்கம் வென்றார். இவரது மரணத்திற்குப் பிறகு, புனித சிடீபன் மருத்துவமனை லூசியின் பெயரை மருத்துவமனையின் ஒரு பிரிவுக்கு சூட்டியது. இப்போது அப்பிரிவு மருத்துவர் லூசி உம்மன், தாய் மற்றும் குழந்தை மருத்துவத் தொகுதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. [10]

பங்களிப்புகள்[தொகு]

புனித சிடீபன் மருத்துவமனை 140 படுக்கைகள் கொண்ட ஒரு மகப்பேறு மருத்துவமனையிலிருந்து 450 படுக்கைகளைக் கொண்ட ஒரு பொது மருத்துவமனையாக வளர்ச்சி கண்டதற்கு லூசியின் பங்களிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. லூசி நோயாளிகளின் நலச் சங்கம் என்ற ஒரு நிறுவனத்தையும் உருவாக்கினார். இந்நிறுவனம் நோயாளிகளுக்கு இலவசமாக ஆதரவளிக்கும் குழுவாகும். [10] லூசி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் தனிப்பட்ட மருத்துவராகவும் இருந்தார். [11]

உம்மன் தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு கன்னியாகவே வாழ்ந்து முடித்தார்.[3]முதுமை காரணமாக பார்க்கென்சிசு [12] நோயால் மார்ச் 2002 ஆம் ஆண்டு இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Indian Missionary in Zimbabwe". Praise the Almighty. 2015. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் June 23, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "P. K. Oommen". Genealogy. 2015. பார்க்கப்பட்ட நாள் June 23, 2015.
  3. 3.0 3.1 "Lucy Kizhakkevedu". Genealogy. 2015. பார்க்கப்பட்ட நாள் June 23, 2015."Lucy Kizhakkevedu". Genealogy. 2015. Retrieved 23 June 2015.
  4. 4.0 4.1 "Dates, Personalities and Events". St. Stephen's Hospital. 2015. Archived from the original on ஏப்ரல் 6, 2017. பார்க்கப்பட்ட நாள் June 23, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. ". St.Stephen's Hospital - History ". www.ststephenshospital.org. Archived from the original on 2017-04-06. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
  6. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் June 18, 2015.
  7. "The First Lucy Oommen Award" (PDF). St. Stephens News. 2015. Archived from the original (PDF) on ஆகஸ்ட் 22, 2017. பார்க்கப்பட்ட நாள் June 23, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Lucy Oommen Award conferred". The Hindu. 16 April 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/lucy-oommen-award-conferred/article1239952.ece. "Lucy Oommen Award conferred". The Hindu. 16 April 2008. Retrieved 23 June 2015.
  9. "Archive Achievements of Alumni". Lady Hardinge Medical College Alumni Association. 2015. Archived from the original on ஜூன் 23, 2015. பார்க்கப்பட்ட நாள் June 23, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. 10.0 10.1 "Dr. A.P.J. Abdul Kalam: Former President of India". abdulkalam.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
  11. "Roy-P-Thomas-IL - User Trees - Genealogy.com". www.genealogy.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
  12. "LUCY OOMMEN". geni_family_tree (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசி_உம்மன்&oldid=3591629" இலிருந்து மீள்விக்கப்பட்டது