உள்ளடக்கத்துக்குச் செல்

லூசிஃபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூசி‌ஃபர்
திரைப்பட வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்பிரித்விராஜ் சுகுமாரன்
தயாரிப்புஆண்டனி பெரும்பாவூர்
கதைமுரளி கோபி
இசைதீபக் தேவ்
நடிப்புமோகன்லால்
ஒளிப்பதிவுசுஜித் வாசுதேவ்
படத்தொகுப்புசம்ஜித் முகமது
கலையகம்ஆஷீர்வாத் சினிமாஸ்
விநியோகம்மேக்ஸ்லேப் சினிமாஸ் என்ட் என்டெர்டெயின்மென்ட்ஸ்
வெளியீடு28 மார்ச் 2019 (2019-03-28)
ஓட்டம்174 நிமிடங்கள்ref
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு30 crore[1]
மொத்த வருவாய்மதிப்பீடு 125.50–127 crore[2][3]

லூசிஃபர் என்பது பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி 2019-ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழி அரசியல் அதிரடித் திரைப்படமாகும். இது இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படம். இப்படத்தின் கதையை முரளி கோபி எழுதியுள்ளார். இது மூன்று பாகங்களாகத் திட்டமிடப்பட்ட திரைப்பட வரிசையில் முதல் படம் ஆகும். இதன் அடுத்த பாகமாக எல்2: எம்புரான் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆஷிர்வாத் சினிமாஸ் மூலம் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். மோகன்லால் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய், இந்திரஜித் சுகுமாரன், சாய் குமார், பைஜு சந்தோஷ், கலாபவன் ஷாஜோன், சனியா அய்யப்பன், நைலா உஷா, சச்சின் கெடேகர், ஃபாசில் ஆகியோர் நடித்துள்ளனர். தீபக் தேவ் இசையமைத்த இந்தப் படத்திற்கு சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, சம்ஜித் முகமது தொகுப்புப் பணியைக் கவனித்துக் கொண்டார்.

லூசிஃபர் 28 மார்ச் 2019 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படம் ஒரு மலையாளப் படத்திற்கான பல வரவுச் சாதனைகளை முறியடித்தது. நான்கு நாட்களில் ₹50 கோடியும் எட்டு நாட்களில் ₹100 கோடியும் தாண்டியது. இந்தங் சாதனைகள் அனைத்தையும் மிக விரைவாக எட்டிய மலையாளப் படமாக மாறியது.[4][5][6] லூசிஃபர் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டிய முதல் மலையாளப் படம் ஆகும்.[7] அண்மைய நிலவரப்படி, இப்படம் அதிக வருவாய் ஈட்டிய மலையாளப் படங்கள் வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது. இத்திரைப்படம், தெலுங்கில் காட்பாதர் (2022) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shrijith, Sajin (20 June 2019). "Empuraan to follow Mohanlal's directorial debut". The New Indian Express. https://www.newindianexpress.com/entertainment/malayalam/2019/jun/20/empuraan-to-follow-mohanlals-directorial-debut-1992523.html. 
  2. Singh, Jatinder (25 May 2023). "Top highest grossing Mollywood films worldwide; 2018 tops with 143 crores in 20 days". Pinkvilla. Archived from the original on 24 November 2023. Retrieved 28 August 2024.
  3. "Survival thriller '2018' Surging towards Rs 100-crore mark". The New Indian Express (in ஆங்கிலம்). 16 May 2023. Archived from the original on 26 March 2024. Retrieved 28 August 2024.
  4. "Lucifer box office: Mohanlal film collects Rs 100 crore worldwide". 8 April 2019.
  5. "എട്ട്‌ ദിവസം നൂറുകോടി, മാന്ത്രിക വര കടന്ന് ലൂസിഫര്‍". Mathrubhumi. 8 April 2019.
  6. "Mohanlal starrer-Lucifer enters Rs 150-crore club". The New Indian Express. 20 April 2019.
  7. "Mohanlal's Lucifer storms into Rs 200 crore club, first for Malayalam cinema". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-06-04. Retrieved 2021-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசிஃபர்&oldid=4239825" இலிருந்து மீள்விக்கப்பட்டது