லுபோக் அந்து மக்களவைத் தொகுதி
லுபோக் அந்து (P203) மலேசிய மக்களவைத் தொகுதி சரவாக் | |
---|---|
Lubok Antu (P203) Federal Constituency in Sarawak | |
லுபோக் அந்து மக்களவைத் தொகுதி (P203 Lubok Antu) | |
மாவட்டம் | லுபோக் அந்து மாவட்டம் செரி அமான் மாவட்டம் பெத்தோங் மாவட்டம் |
வட்டாரம் | செரி அமான் பிரிவு பெத்தோங் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 26,780 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | லுபோக் அந்து மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெத்தோங்; அசா செயா சிமாங்காங் |
பரப்பளவு | 3,294 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1968 |
கட்சி | சரவாக் கட்சிகள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | ரோய் அங்காவ் கிங்கோய் (Roy Angau Gingkoi) |
மக்கள் தொகை | 26,780 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
லுபோக் அந்து மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lubok Antu; ஆங்கிலம்: Lubok Antu Federal Constituency; சீனம்: 卢布安图联邦选区) என்பது மலேசியா, சரவாக், சமரகான் பிரிவில்; அசா ஜெயா மாவட்டம்; சிமுஞ்சான் மாவட்டம்; கெடோங் மாவட்டம்; செபுயாவ் மாவட்டம்; ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P203) ஆகும்.[5]
லுபோக் அந்து மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து லுபோக் அந்து மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பெத்தோங் மாவட்டம்
[தொகு]பெத்தோங் மாவட்டம் (Betong District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் பெத்தோங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்.[7] இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பெத்தோங் நகரம். பெத்தோங் மாவட்டம் பாரம்பரியமாக இபான், மலாய் மக்கள் மற்றும் சீனர் மக்களின் தாயகமாக உள்ளது. பெரும்பாலான இபான் மக்கள் பெத்தோங் மற்றும் சரதோக் கிராமப் புறங்களில் பரவி உள்ளனர்.
முன்பு இந்த மாவட்டம், சரிபாசு (Saribas) என்ற பெயரில் செரி அமான் பிரிவின் (Sri Aman Division) நிர்வாகத்தின் கீழ் இருந்தது. இன்றும் சரவாக் மக்களிடையே சரிபாசு எனும் சொல் புழக்கத்தில் உள்ளது.
சரிபாசு
[தொகு]சரிபாசு அதன் இபான் மக்களின் நீளவீடுகளுக்கு பிரபலமானது; மற்றும் இபான் கலாசாரத்தின் மையமாகவும் கருதப் படுகிறது. சரிபாசு பகுதியில் 222 நீளவீடுகள் உள்ளன.
இங்குள்ள இபான் மக்கள், சரவாக் மாநிலத்தின் பூர்வீகப் பழங்குடியினர். இவர்கள் கடல் டயாக் (Sea Dayaks) மக்கள் என்று அழைக்கப் படுவதும் உண்டு.[8][9]
லுபோக் அந்து மக்களவைத் தொகுதி
[தொகு]லுபோக் அந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
லுபோக் அந்து தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[11] | |||
3-ஆவது மக்களவை | P129 | 1971-1974 | ஜொனாதன் நர்வின் ஜிங்காங் (Jonathan Narwin Jinggong) |
சரவாக் தேசிய கட்சி (SNAP) |
4-ஆவது மக்களவை | P139 | 1974-1978 | ||
5-ஆவது மக்களவை | 1978-1982 | பாரிசான் நேசனல் (சரவாக் தேசிய கட்சி) (SNAP) | ||
6-ஆவது மக்களவை | 1982-1986 | ஆண்ட்ரூ ஜாங்கி முயாங் (Andrew Janggi Muyang) | ||
7-ஆவது மக்களவை | P162 | 1986-1987 | பாரிசான் நேசனல் (சரவாக் தயாக் மக்கள் கட்சி) (PBDS) | |
1987-1990 | ஜாவா கெராங் (Jawah Gerang) | |||
8-ஆவது மக்களவை | P164 | 1990-1995 | ||
9-ஆவது மக்களவை | P176 | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | P177 | 1999-2004 | பாரிசான் நேசனல் (சரவாக் மக்கள் கட்சி) (PRS) | |
11-ஆவது மக்களவை | P203 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | வில்லியம் நியாலாவ் பாடாக் (William Nyalau Badak) | ||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
2018 | சுயேச்சை | |||
14-ஆவது மக்களவை | 2018 | ஜுகா முயாங் (Jugah Muyang) | ||
2018-2020 | பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) (PKR) | |||
2020-2022 | சுயேச்சை | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | ரோய் அங்காவ் கிங்கோய் (Roy Angau Gingkoi) |
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (சரவாக் மக்கள் கட்சி) (PRS) |
தேர்தல் முடிவுகள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ரோய் அங்காவ் கிங்கோய் (Roy Angau Gingkoi) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 6,644 | 34.44 | 34.44 | |
ஜானிகல் ராயோங் நிங்கிபா (Johnical Rayong Ngipa) | சரவாக் ஐக்கிய கட்சி (PSB) | 6,544 | 33.92 | 33.92 | |
ஜுகா முயாங் (Jugah Muyang) | பெரிக்காத்தான் நேசனல் (PN) | 5,360 | 27.78 | 27.78 | |
லங்கா லியாஸ் (Langga Lias) | பாக்காத்தான் (PH) | 746 | 3.87 | 23.22 ▼ | |
மொத்தம் | 19,294 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 19,294 | 98.76 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 243 | 1.24 | |||
மொத்த வாக்குகள் | 19,537 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 28,995 | 66.54 | 4.54 ▼ | ||
Majority | 100 | 0.5 | 6.76 ▼ | ||
சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [12] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
- ↑ "Iban of Brunei". People Groups.
- ↑ Sutrisno, Leo (2015-12-26). "Rumah Betang". Pontianak Post. Archived from the original on 2015-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.
மேலும் காண்க
[தொகு]- செரியான் மாவட்டம்
- தெபெடு மாவட்டம்
- மலேசியாவின் மாநிலப் பிரிவுகள்
- மலேசிய அரசியல் கட்சிகள்
- மலேசியத் தேர்தல் தொகுதிகள்