லுட்விக் போல்ட்சுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


லுட்விக் போல்ட்சுமான்
Ludwig Eduard Boltzmann
லுட்விக் போல்ட்சுமான் (1844-1906)
பிறப்பு(1844-02-20)பெப்ரவரி 20, 1844
வியன்னா, ஆஸ்திரியா
இறப்புசெப்டம்பர் 5, 1906(1906-09-05) (அகவை 62)
இத்தாலி
வாழிடம்ஆஸ்திரியா ஜெர்மனி
தேசியம்ஆஸ்திரியர்
துறைஇயற்பியலாளர்
பணியிடங்கள்கிராஸ் பல்கலைக்கழகம்
வியன்னா பல்கலைக்கழகம்
மியூனிக் பல்கலைக்கழகம்
லெய்ப்சிக் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்வியன்னா பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்யோசப் ஸ்டெபான்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
பால் எஹ்ரன்ஃபெஸ்ட்
பிலிப் பிராங்க்
கஸ்டாவ் ஹெர்கோல்ட்ஸ்
ஃபிராங்க் ஹோகேவார்
இக்னாசிஜ் கிளமென்சிக்
லிசெ மெய்ட்னர்
அறியப்படுவதுபோல்ட்ஸ்மேன் மாறிலி
போல்ட்ஸ்மேன் சமன்பாடு
ஹெச் கோட்பாடு
போல்ட்ஸ்மேன் பகிர்வு
ஸ்டேபான்-போல்ட்ஸ்மேன் விதி
கையொப்பம்

லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் (Ludwig Eduard Boltzmann, லுட்விக் எட்வர்ட் போல்ட்ஸ்மான், பெப்ரவரி 20, 1844செப்டம்பர் 5, 1906) ஒரு ஆஸ்திரிய இயற்பியலாளர். புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். நகர்ந்து கொண்டிருக்கும் வளிமங்கள்மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துகான சமன்பாட்டினை வரையறுத்துத் தந்தார். அணுவியல் கோட்பாடு முழுதும் அறியப்படாத கால கட்டத்திலேயே அத்துறைக்கு பல முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியென்னாவில் 1844 ல் பிறந்தார் போல்ட்ஸ்மேன். இவரின் தந்தை ஒரு வருமான வரி அதிகாரி. தாயும் பாட்டியும் கடிகாரம் விற்பனை செய்யும்  தொழில் செய்து வந்தார்கள். வசதி நிறைந்த போல்ட்சுமானுக்கு ஆசிரியர்கள் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தினார்கள். இவரது 14 வது வயதில் இவரின் தந்தை காலமாகிவிட்டார். படிப்பு பாதியில் நின்று போனது. இருந்தாலும் தனது 19 வது வயதில் வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் விடுபட்ட கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். அன்றைக்கு பிரபலமாக இருந்த இயற்பியல் பேராசிரியர்கள் இவருக்குப் பாடம் எடுத்தார்கள். 1866 ல் முனைவர் பட்டம் பெற்றார்.

பின்னர் கணித இயற்பியலில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு சாதித்தார், போல்ட்ஸ்மேன். அணு மற்றும் அணுத்துகள்கள் மீது தான் போல்ட்சுமேனின் முழு கவனமும் இருந்தது. 'மேக்சுவெல் போல்ட்சுமேன் பகிர்வு', 'மேக்சுவெல் போல்ட்சுமேன் புள்ளிவிவரம்' ஆகியவை தான் இயந்திரவியலில் அடிப்படைக் கற்களாகத் திகழ்ந்து கொண்டிருகின்றன.

1887 இல் லுட்விக் போல்ட்சுமானும் அவரது சக பணியாளர்களும். (இடமிருந்து நிற்பவர்கள்) வால்த்தர் நெர்ன்ஸ்ட், ஐன்றிக் ஸ்ட்ரெயிண்ட்ஸ், சுவாந்தே அரேனியசு, ஐக்கி, (இடமிருந்து இருப்பவர்கள்) ஓலிங்கர், ஆல்பர்ட் வொன் எட்டிங்கோசன், போல்ட்சுமான், கிளெமென்சிச், ஓசுமானிங்கர்

போல்ட்ஸ்மேன் கண்டறிந்து அறிவித்த இத்ததகைய விதிகள், குவாண்டம் கோட்பாட்டின் துணையின்றி தன்னிச்சையாகவும் சுலபமாகவும் புள்ளி விவர அடிப்படையிலான இயந்திரவியலை புரிந்து கொள்ள மிகச்சிறந்த சாதனமாக அமைந்தன. வெப்பம் என்றால் என்ன? தட்பவெப்பம் எவ்வாறெல்லாம் ஓரிடத்தில் மாறுபடுகின்றது என்றெல்லாம் வெப்பம் என்பதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள போல்ட்ஸ்மேன் கோட்பாடுகள் அமைந்தன. 'தெர்மோ டைனமிக்ஸ்'  என்பது இயற்பியலின் ஒரு முக்கிய கூறு. வெப்பம் மற்றும் வெப்பம் கொண்டு செல்வது என்பது பற்றிய படிப்பு. பெட்ரொலை எரிப்பதன் மூலம் ஏற்படும் வேப்பாதால் மோட்டார் வாகனங்கலை இயக்குவது இந்தக் கோட்பாட்டின் அடிப்படை தான். இந்த இயக்கத்தில் ஈடுபடும் வாயுக்களுக்கு ஓடும் அணுக்களைக் கொண்டும் சமன்பாடுகளை நிறுவி வடிவமைத்து விளக்கினார், போல்ட்ஸ்மேன். கணிதத்தின் புள்ளியியல் துணை கொண்டு இயற்பியலின் அணு ஓட்டத்தை அணுகி விளக்கிய முதல் அறிவியலாளர் இவரே.

1906 இல் தனது 62வது அகவையில் போல்ட்ஸ்மேன் இறந்தார். போல்ட்ஸ்மேனின் கோட்பாடுகளுக்கு அவர் உயிருடன் இருக்கும் வரை ஒரு பக்கம் எதிர்ப்பும் இருந்து வந்தது. இதனால் அவர் மோசமான மனபாதிப்புக்குள்ளானார். எரிச்சல் மற்றும் விரக்தியின் உச்சிக்கே சென்று பலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். வாழும் வரை இவரின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் இவரின் மறைவுக்குப் பின் தான் அதனைப் புரிந்து கொண்டார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Uffink, Jos (2004). "Boltzmann's Work in Statistical Physics". ஸ்டான்போர்ட் மெய்யியல் கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 2007-06-11.
  • E.G.D. Cohen, 1996, "Boltzmann and Statistical Mechanics."
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுட்விக்_போல்ட்சுமான்&oldid=3393898" இலிருந்து மீள்விக்கப்பட்டது