லுட்சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லுட்சியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: டிப்திரா
குடும்பம்: குலிசிடே
பேரினம்: லுட்சியா
தியோபோல்டு, 1903

லுட்சியா (Lutzia) கொசுக்களின் ஒரு பேரினம் ஆகும். இதனை 1903ஆம் ஆண்டில் ஃபிரடெரிக் வின்சென்ட் தியோபால்ட் என்பவர் முதன்முதலில் விவரித்தார்.[1] இது இளம் உயிரிகளின் வளர் நிலைகளில் பிற இளம் உயிரிகளை இரைகெளவல் நடத்தையை வெளிப்படுத்தும் இனங்களாகும். இதில் மாதிரி வகை சிற்றினம் லுட்சியா பிகோடி ஆகும்.

உயிரியல்[தொகு]

இந்த பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் நியோட்ரோபிகல் ஆசியா மற்றும் ஆத்திரேலியாவில் நான்கு சிற்றினங்களும், ஆப்ரோட்ரோபிகல் பகுதியில் ஒன்றும் ஜப்பானின் ஒகசவர தீவுகளில் ஒன்றும் காணப்படுகிறது நிகழ்கிறது.

லுட்சியாவில் மேற்கொள்ளப்பட்ட கொன்றுண்ணி ஆய்வுகளில் இதன் இளம் உயிரிகள் நாள் ஒன்றுக்கு 18-19 வரை பிற கொசு இளம் உயிரிகளைக் கொல்லுவதாகக் கண்டறியப்பட்டது. குறிப்பாக லுட்சியா இளம் உயிரி ஏடிசு எசிப்டி இளம் உயிரிகளை அனாஃபிலிசு ஸ்டிபன்சி மற்றும் குயூலெக்சு குயுன்குபேசியடசு இளம் உயிரிகளைவிடக் கொல்லுவதாக அறியப்படுகிறது. எனவே குறைந்த அளவில் நீர் உள்ள நீர்நிலைகளில் லுட்சியா பிற கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் வல்லவை என்றும், லுட்சியாவினை உயிர்கட்டுப்பாட்டுக் காரணியாகப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது.[சான்று தேவை]

துணை மற்றும் இனங்கள்[தொகு]

துணைப்பேரினம் மற்றும் சிற்றினங்களாக வால்டர் ரீட் உயிரியவகைப்பாடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது[2]

 • துணைப்பேரினம் இன்சுலாலூட்சியா தனகா லுட்சியா ஷினோனாகாய் (தனகா, மிசுசாவா மற்றும் சாக்ஸ்டாட்)
 • துணைப்பேரினம் லுட்சியா தியோபால்ட்
  • லுட்சியா அல்லோசிடிக்மா ஹோவர்ட், டயர் மற்றும் நாப்
  • லுட்சியா பிகோடி (பெல்லார்டி) (வேறுபெயர்: எல் பிரேசிலியே டயர், மற்றும் லு. பேட்டர்சோனொ சனான் மற்றும் டெல் போன்டே)
 • துணைப்பேரினம் மெட்டலுட்சியா தனகா
  • லுட்சியா அக்ரானென்சிசு சிங் மற்றும் பிரகாசு
  • லுட்சியா சிங்மெயென்சிசு சோம்பூன் மற்றும் ஹர்பாக், 2019 [3]
  • லுட்சியா பசுகானா (வீடெமன்)(வேறுபெயர். லு. கான்லர் ரோபினோ-டெசுவோயிடி, லு. லுரிடசு டோல்ஷால் மற்றும் லு. செட்டூலோசசு டோல்ஷால்)
  • லுட்சியா ஹாலிஃபாக்சி (தியோபால்ட்) (வேறுபெயர்: லு. ஆரியோபங்க்டிசு லட்லோ, லு. மல்டிமகுலோசசு லெய்செஸ்டர் மற்றும் லு. ராப்டார் எட்வர்ட்சு)
  • லுட்சியா டைகிரிப்சு (டி கிராண்ட்பிரே & டி சார்மோய்) (வேறுபெயர். லு. பிமாகுலாடா தியோபால்ட், லு. ஃபுசுகா தியோபால்ட், லு. மாக்குலிக்ரூசு தியோபால்ட், எல். மொம்பாசென்சிசு தியோபால்ட் மற்றும் லு. சியராலியோனிசு தியோபால்ட்)
  • லுட்சியா வோரக்சு எட்வர்ட்சு

மேற்கோள்கள்[தொகு]

 1. Frederick V. Theobald. 1903. A monograph of Culicidae or mosquitoes, III. London: British Museum (Natural History). xv + 359pp.; 155; http://www.mosquitocatalog.org/files/pdfs/131700-8.Pdf பரணிடப்பட்டது 2016-03-25 at the வந்தவழி இயந்திரம்.
 2. Thomas V. Gaffigan, Richard C. Wilkerson, James E. Pecor, Judith A. Stoffer and Thomas Anderson. 2016b. "Genus Lutzia Theobald" in Systematic Catalog of Culicidae, Walter Reed Biosystematics Unit, http://www.mosquitocatalog.org/taxon_descr.aspx?ID=38, accessed 21 Feb 2016.
 3. Pradya Somboon and Ralph E Harbach. 2019. Lutzia (Metalutzia) chiangmaiensis n. sp. (Diptera: Culicidae), Formal Name for the Chiang Mai (CM) Form of the Genus Lutzia in Thailand. Journal of Medical Entomology, tjz072, https://doi.org/10.1093/jme/tjz072, published 30 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுட்சியா&oldid=3209681" இருந்து மீள்விக்கப்பட்டது