லுசாய் மலைகள்
லுசாய் மலைகள் | |
---|---|
![]() லுசாய் மலை | |
உயர்ந்த இடம் | |
Peak | புவாங்பூய் |
உயரம் | 2,157 m (7,077 ft) |
ஆள்கூறு | 23°10′N 92°50′E / 23.167°N 92.833°Eஆள்கூறுகள்: 23°10′N 92°50′E / 23.167°N 92.833°E |
புவியியல் | |
அமைவிடம் | மிசோரம் மற்றும் திரிபுரா, இந்தியா |
மலைத்தொடர் | பட்கை மலைத்தொடர் |
லுசாய் மலைகள் என்பது இந்தியாவின் மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலத்தில் உள்ள மலைத்தொடர் ஆகும். இது பட்கை மலைத்தொடர் தொகுதியின் ஒரு பகுதியாகும். இதன் உயரமான புள்ளி, புவாங்பூய் 2,157 மீ உயரம் உடையது. இதன் மற்றொரு பெயர் நீல மலைகள் ஆகும்[1].
தாவரங்கள் மற்றும் மிருகங்கள்[தொகு]
இந்த மலைகளின் பெரும்பகுதி அடர்ந்த மூங்கில் காடுகளை கொண்டிருக்கிறது. இதன் கிழக்கு பகுதிகளில் குறைவான மழைப் பொழிவு இருப்பதால் புற்கள் மறைத்த சரிவுகள் காணப்படுகின்றன. லுசாய் மலைகளில் உயரமான சிகரம் நீல மலை ஆகும்[2] .
குடியிருப்பவர்கள்[தொகு]
இந்த மலையில் குடியிருப்பவர்கள் லுசாய்கள் மற்றும் இதர மிசோ பழங்குடியினர்கள், ஆனால் மக்கள் தொகை மிக மிகக் குறைவு. தெரிந்த காலம் முதல் இங்கு குடியிருப்பவர்கள் குகிகள், மற்றும் 1840-ல், வடக்கிலிருந்து படையெடுக்கும் வரை லுசாய்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இவர்கள் 1849-ல் பிரித்தானியர்களை முதல் தாக்குதல் நடத்தினார்கள், வட கிழக்கு இந்தியாவில் பிரச்சனை செய்த பழங்குடியினருள் இவர்கள் முக்கியமானவர்கள், ஆனால் 1890 க்குப் பிறகு வட லுசாய் கிராமங்களில் அமைதி நிலவியது. 1892- க்குப் பிறகு கிழக்கு லுசாய்கள் குறையத் துவங்கினார்கள்[2]. தெற்கு லுசாய் மலை நாட்டின் மேலாண்மை 1898-ல் வங்கத்திலிருந்து அசாமிற்கு மாற்றப்பட்டது[2].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Phawngpui". MizoTourism. மூல முகவரியிலிருந்து 2013-03-03 அன்று பரணிடப்பட்டது.
- ↑ 2.0 2.1 2.2 Chisholm 1911, பக். 130.