லுக் தெப் பொம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லுக் தெப் (look thep doll) என்பது ஒரு தாய்லாந்து பொம்மை ஆகும். இந்த பொம்மைகள் சிறிய அளவில் இருந்து ஒரு உண்மைக் குழந்தையின் அளவுவரை செய்யப்படுகின்றன.

லுக் தெப் என்றால் தாய்லாந்தில் குழந்தை தேவதை என்று பொருள். இந்த பொம்மைகள் தரமான நெகிழியால், அசலான தலைமுடியுடன் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களுடன், அச்சு அசலாக உண்மையான குழந்தையைப் போலவே கிடைக்கின்றன, இந்த பொம்மைகளுக்கு அவர்கள் புத்தாடை, நகைகள் போன்றவற்றால் அலங்கரிக்கிறார்கள். தொட்டிலில் இட்டு, தூங்க வைப்பது போல. இவற்றை உயிருள்ள குழந்தையை நடத்துவது போலவே நடத்தப்படுகின்றன. லுக் தெப் பொம்மைகளை நன்கு பார்த்துக்கொண்டால், அவை அவர்களையும் நன்கு பார்த்துக்கொள்ளும் என்பது நம்பிக்கை.[1]

2016 ஆம் ஆண்டில் தாய் ஸ்மைல் விமான நிறுவனம் லுக் தெப் பொம்மைகளுக்குத் தங்கள் வாடிக்கையாளர்கள் உணவும் இருக்கையும் தரலாம் என்று விளம்பரம் செய்தது. விமானப் பணியாளர்கள் லுக் தெப் பொம்மைகளை மனிதர்களைப் போலவே நடத்த வேண்டும் என்று அறிவிக்கையும் அனுப்பப்பட்டது. அப்போதுதான் லுக் தெப் பொம்மைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஷங்கர் (11 ஏப்ரல் 2018). "பொம்மை தேவதைகள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Kenneth Bachor (3 சனவரி 2016). "Thailand's Intriguing Luk Thep Doll Culture". time.com. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுக்_தெப்_பொம்மை&oldid=3578190" இலிருந்து மீள்விக்கப்பட்டது