லீ சாங்-யூண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீ சாங்-யூண்
பிறப்புஆகத்து 15, 1981 (1981-08-15) (அகவை 42)
சியோல்
தென் கொரியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005-இன்று வரை

லீ சாங்-யூண் (ஆங்கில மொழி: Lee Sang-yoon) (பிறப்பு: ஆகஸ்ட் 15, 1981) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு முதல் டிராமா சிட்டி, ஏர் சிட்டி, ஏஞ்சல் ஐஸ் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் சாண்டா பார்பரா போன்ற சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

இவர் 2007ஆம் ஆண்டு செக்ஸ் ஜீரோ 2 என்ற திரைபப்டத்தில் கிய்-ஜோ என்ற காதாபதிரத்தில் துணை நடிகராக நடித்திருந்தார். 2014ஆம் ஆண்டு சாண்டா பார்பரா என்ற ஒரு காதல் திரைப்படத்தில் முதல் முதலாக கதாநயகானாக நடித்துள்ளார்.

தொலைக்காட்சி[தொகு]

  • டிராமா சிட்டி
  • ஏர் சிட்டி
  • தி டியோ
  • ஏஞ்சல் ஐஸ்
  • லயர் கேம்

திரைப்படங்கள்[தொகு]

  • 2007: செக்ஸ் ஜீரோ 2
  • 2014: சாண்டா பார்பரா

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_சாங்-யூண்&oldid=2645219" இருந்து மீள்விக்கப்பட்டது