லீ ஆன் வால்டர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீ ஆன் வால்டர்சு
LeeAnne Walters
தேசியம்அமெரிக்கர்
அறியப்படுவதுசுற்றுச்சூழல் ஆர்வலர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2018)
கருத்துச் சுதந்திர வீராங்கனை விருது (2016)

லீ ஆன் வால்டர்சு (LeeAnne Walters) என்பவர் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் பிளிண்ட்டு நகரைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராவார். பிளிண்ட்டு நகரத்தின் நீர் நெருக்கடியை அம்பலப்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பு மூலம் இவர் பிரபலமானார்.[1] நியூயார்க்கு நகரத்தை தலைமியிடமாகக் கொண்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் நிறுவனத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான கருத்துச் சுதந்திர வீராங்கனை விருது லீ ஆன் வால்டர்சுக்கு வழங்கப்பட்டது.[2][3] 2017 ஆம் ஆண்டு வெளியான தொலைக்காட்சி நாடகத் திரைப்படமான பிளிண்ட்டு நச்சு நீர் பேரழிவை அடிப்படையாகக் கொண்ட படமாகும். இந்த திரைப்படத்தில் வால்டர்சு கதாபாத்திரத்தில் பெட்சி பிராண்ட்டு நடித்தார்.[4]பிளிண்ட்டு நகரத்தின் நீருக்கான போராட்டத்திற்காக 2018 ஆம் ஆண்டு வால்டர்சுக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[5][6]பிப்ரவரி 3, 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதியன்று வால்டர்சு பிளிண்ட்டு நகரத்தின் நீர் மாசுபாடு நெருக்கடியின் போது மேற்பார்வை மற்றும் சீர்திருத்தத்திற்கான ஐக்கிய அமெரிக்க மன்றக் குழுவின் முன் தனது பணிகள் குறித்து இவர் சாட்சியம் அளித்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Brueck, Hilary (24 February 2016). "A mother in Flint, Michigan collected more than 800 neighborhood water samples to help uncover the city's lead crisis". nordic.businessinsider.com. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
  2. "2016 PEN/Toni and James C. Goodale Freedom of Expression Courage Award: Lee-Anne Walters and Dr. Mona Hanna-Attisha". pen.org. 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
  3. "PEN America to Honor Flint Mother and Local Doctor for Speaking Out to Expose Poisoned Water Supply". pen.org. 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
  4. Saraiya, Sonia (27 October 2017). "TV Review: Lifetime's 'Flint' Starring Queen Latifah". Variety. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
  5. "Flint water activist LeeAnne Walters wins environmental prize". eu.freep.com. Associated Press. 23 April 2018. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
  6. "LeeAnne Walter". goldmanprize.org. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
  7. Former EM removed from witness list for Congressional hearing on Flint water The Flint Journal via MLive.com, February 3, 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_ஆன்_வால்டர்சு&oldid=3146073" இலிருந்து மீள்விக்கப்பட்டது