லீஸ் இளநட்சத்திர விளையாட்டுக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லீஸ் இளநட்சத்திர விளையாட்டுக் கழகம்
SC Tamil Youngstar Lyss Switzerland

லீஸ் இளநட்சத்திர விளையாட்டுக் கழகம் (SC Tamil Youngstar Lyss, Switzerland) 1991 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள லீஸ் நகரில் ஒரு சில சுவிட்சர்லாந்து வாழ் இலங்கை புலம்பெயர்ந்தோரால் அமைக்கப்பட்ட உதைப்பந்தாட்டக் கழகமாகும். புலம்பெயர்ந்த தமிழரிடையே உதைபந்தாட்ட திறமையை முறைப்படி வளர்த்தெடுக்க நிறுவப்பட்டது இந்த கழகம். இதற்கமைய 9 வயது முதல் 21 வயதும் அதற்கு மேல்பட்ட வயதினருமாக உதைபந்தாட்ட வீரர்களை உருவாக்கும் நோக்கோடு வளர்த்தெடுக்கப்பட்டு இன்று பல வயதொத்த அணிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இளம்தமிழர் அணிகள், வயது வந்தோர் அணிகளென சுமார் 13 பிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகின்றது.

இந்த உதைப்பந்தாட்டக் கழகத்தில் 9, 11, 13, 15, 17, 21, 21 வயதினருக்கு மேல் (3 அணிகள்), 35 வயதினருக்கு மேல் மற்றும் மகளிர் அணிகள் (2 அணிகள்) எனப் பல பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்த கழகத்தைச் சேர்ந்தவர்கள் உதைப்பந்தாட்டத்தில் மட்டுமன்றி மெய்வல்லுநர் போட்டிகள், சுதேச விளையாட்டான தாச்சி போன்றவற்றிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

வளர்ந்தோர் உதைபந்தாட்ட அணி[தொகு]

வளர்ந்தோர் உதைப்பந்தாட்ட அணி 1995 ஆம் ஆண்டுல் நிறுவப்பட்டது. இவ்வணியில் 36 பேர் உறுப்பினராக உள்ளனர். கழக நிறம்: மஞ்சள் மற்றும் கருப்பு. சீருடை: மஞ்சள் மேலங்கி, கருப்பு கால்சட்டை, மஞ்சள் அல்லது கறுப்பு காலுறை.

1996 முதல் கட்டமைக்கப்பட்ட இந்த அணி 2000 ஆண்டின் பின்னர் சுவிட்சர்லாந்தின் பலம் மிக்க ஒரு அணியாக திகழ்ந்து வருகிறது. முக்கியமாக 2012 ஆம் ஆண்டில் அது பங்கு பற்றிய எல்லா பதினான்கு சுற்றுப் போட்டிகளிலுமே இறுதியாட்டத்துக்கு வந்ததுடன் 9 இல் வெற்றி பெற்று முதலாம் இடத்தை தக்க வைத்தது. முக்கியமாக 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற சவால் மிக்க தமிழீழக் கிண்ணத்துக்கான ஐரோப்பிய ரீதியாலான போட்டிகளில் பங்கு பற்றி முதலாம் இடத்தை கைப்பற்றியது[சான்று தேவை].

சுவிட்சர்லாந்தின் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் கணிப்பின் அடிப்படையில் தர நிலை வரிசையில் அது முதலாம் இடத்தை அடைந்திருகிறது. இது ஐரோப்பிய நாடுகளான செருமனி, பிரான்சு, டென்மார்க். நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறும் சுற்றுப் போட்டிகளிலும் பங்கு பற்றியது. இந்த அணியின் தற்போது ஆடுகளத்தில் இருக்கும் வீரர்கள் ஐரோப்பிய விளையாட்டுத் தரத்தைப் பின்பற்றி 9.11.13.15 வயது பிரிவிலேயே சேர்த்துக் கொள்ளப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டு பெரியோர் அணிக்காக உருவாக்கப்பட்டு வந்தவர்களாவர்.

வெளி இணைப்புகள்[தொகு]