லீலா ராம்குமார் பார்கவா
லீலா ராம்குமார் பார்கவா Lila Ramkumar Bhargava | |
|---|---|
| பிறப்பு | இந்தியா, 1921-1922 |
| இறப்பு | 25 மே 2014 பெங்களூர், கருநாடகம், இந்தியா |
| பணி | சமூகப் பணியாளர், சுதந்திரப் போராட்ட வீரர் |
| வாழ்க்கைத் துணை | முன்சி ராம் குமார் பார்கவா |
| பிள்ளைகள் | ரஞ்சித் பார்கவா |
| விருதுகள் | பத்மசிறீ |
ராணி லீலா ராம்குமார் பார்கவா (Rani Lila Ramkumar Bhargava) இந்திய சுதந்திர போராட்ட வீரர், சமூக சேவகர், கல்வியாளர்[1] மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவர்[2] போன்ற பல சிறப்புக்களுக்கு உரியவராவார். இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் தோழியாக இவர் இருந்தார்.[2]
ஆசியாவின் மிகப் பழமையான அச்சகமான நவல் கிசோர் அச்சகத்தின் நிறுவனரான முன்சி நவல் கிசோர் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார்.[3] ராணி லீலாவின் கணவர் பெயர் முன்சி நவல் கிசோர் பார்கவா என்பதாகும். பார்கவா முன்சி நவல் கிசோர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை உறுப்பினராவார். அப்போது இந்தியாவின் வைசிராயாக இருந்த லார்டு வேவல் பார்கவாவிற்கு ராசா என்ற பட்டத்தை கொடுத்தார்.[4]
ராணி லீலாவுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் குழந்தைகளாவர்.[5] இவருடைய மகன் இரஞ்சித் பார்கவா பத்மசிறீ விருது [4] பெற்ற ஒரு பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலராவார்.[6] 1971-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை ராணி லீலாவிற்கு வழங்கிச் சிறப்பித்தது.[7]
ராணி லீலா தன்னுடைய 92 ஆவது வயதில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "First death anniversary observed". Press Reader. 2015. Retrieved 28 May 2015.
- 1 2 "Freedom fighter Rani Lila Ram Kumar Bhargava passes away". Business Standard. 25 May 2014. Retrieved 28 May 2015.
- ↑ B. G. Varghese (2014). Post Haste Quintessential India. Wstland. ISBN 9789383260973. Archived from the original on 28 May 2015. Retrieved 28 May 2015.
{{cite book}}: More than one of|archivedate=and|archive-date=specified (help); More than one of|archiveurl=and|archive-url=specified (help) - 1 2 "Ranjit Bhargava". Video. YouTube. 19 August 2011. Retrieved 28 May 2015.
- ↑ May 25, Ashish Tripathi | TNN |; 2014; Ist, 20:01. "Veteran freedom fighter Rani Lila Ram Kumar Bhargava died following brief illenss at the PGI hospital. Bhargava is survived by three sons and a daughter - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-06-23.
{{cite web}}:|last2=has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Drive to get Upper Ganga declared a World Heritage site". Ganga Action Parivar. 2012. Retrieved 28 May 2015.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. Retrieved 11 November 2014.