லீலா துபே
லீலா துபே (Leela Dube 27 மார்ச் 1923 - 20 மே 2012) ஒரு புகழ்பெற்ற மானுடவியலாளர் மற்றும் பெண்ணிய அறிஞர் ஆவார், பலரால் லீலாடி என்று பரவலாக அழைக்கப்படுகிறார். இவர் மானுடவியலாளர் மற்றும் சமூகவியலாளர் சியாமா சரண் துபேவின் விதவை மற்றும் மறைந்த மரபாந்த பாடகி சுமதி முதட்கரின் தங்கை ஆவார் . இவருக்கு முகுல் துபே மற்றும் சௌரவ் துபே இரண்டு மகன்கள் உள்ளனர். உறவு மற்றும் பெண்கள் கல்வி தொடர்பான பணிகளுக்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். இவர், மெட்ரிலினி மற்றும் இஸ்லாம் :ரிலீஜியசு அண்ட் சொசைட்டி இன் தெ லக்டீவ்சு உட்பட பல புத்தகங்களை எழுதினார் [1] மற்றும் விமன் அண்ட் கின்சிப்:கம்பேரட்டிவ் பெர்சுபக்டிவ்சு ஆன் ஜென்டர் இன் சவுத் அண்ட் சவுத்-ஈசுட்டு ஏசியா உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.
தொழில்
[தொகு]இவர் முன்பு உஸ்மானியாவில் கற்பித்திருந்தாலும், துபேவின் கல்வி வாழ்க்கை 1960 இல் மத்தியப் பிரதேசத்தின் சாகர் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இவர் 1975 இல் தில்லி சென்றார். இந்திய அரசு 1974 ஆம் ஆண்டில் வெளியிட்ட "சமத்துவத்தை நோக்கி" அறிக்கையை வடிவமைக்கும் குழுவில் இவர் முக்கிய பங்கு வகித்தார் . இந்திய அரசு இந்திய நாடாளுமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) மற்றும் இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் மூலமாக இந்திய கல்வி மையத்தில் பெண்கள் படிப்பை மையமாக கொண்டு வருவது பற்றி விவாதித்தது.
இவர் 1970 களில் இந்திய சமூகவியல் சங்கத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தார் மற்றும் பெண்களின் சமூக அக்கறையை ,சமூகவியலில் அறிமுகப்படுத்தும் பொறுப்பில் இருந்தார். 1980 ல் ஆனந்த், கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தில் முன்னோடி மற்றும் மூத்த ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார். [2] ஐஆர்எம்ஏவில் இவர் 1980 இல் முதல் தொகுதிக்கு ஒரு பாடத்திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தார், பின்னர் இந்தப் பாடத்திட்டம் "கிராமப்புற சூழல்" என்று அழைக்கப்பட்டது. இது "கிராமப்புற வேலைப் பிரிவுக்கு" ஒரு ஆயத்த படிப்பாக வடிவமைக்கப்பட்டது. இது வணிகப் பள்ளிகளுக்கான ஒரு கண்டுபிடிப்பாகும், இது இவருடைய சொந்த சமூகவியல் துறை வேலை அனுபவங்களிலிருந்து உருவானது. 2012 இல், இது "கிராமப்புற சமூகம் மற்றும் அரசியல்", "கிராமப்புற வாழ்வாதார அமைப்புகள்" மற்றும் "கிராமப்புற ஆராய்ச்சி முறைகள்" என்று அழைக்கப்படும் மூன்று படிப்புகளாக வழங்கப்பட்டது. [3]
1984 ஆம் ஆண்டு உலக சமூகவியல் மாநாட்டில், பெண் ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் ஆய்வு அறிஞர்கள் ஆராய்ச்சி குழுவில் ஆதிக்கம் செலுத்தினர். 1982-86 இல் பொருளாதார மற்றும் அரசியல் வாராந்திரத்தில் பாலியல் தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்பு பற்றிய விவாதத்தில், இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது மற்றும் பெண்களின் பற்றாக்குறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இடையிலான நேரடி உறவு பற்றிய இவரது கணிப்பு பிற்காலத்தில் உண்மை என நிரூபிக்கப்பட்டது.
பெண்கள் ஆய்வு அறிஞர்களின் குழு முயற்சி காரணமாக (லீலா துபே உட்பட), ஆர்சி 32 உலக சமூகவியல் காங்கிரசில் நிறுவனமயமாக்கப்பட்டது. 12 வது சர்வதேச மானுடவியல் மற்றும் இனவியல் அறிவியல், பற்றிய கட்டுரைகளை முன்வைக்க துபே பல ஆர்வலர்களை அழைத்தார்.
விருதுகள்
[தொகு]2007 ஆம் ஆண்டில் இவர் இந்திய சமூகவியல் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.[சான்று தேவை]
சான்றுகள்
[தொகு]- ↑ "In Memoriam: Prof. Leela Dube(1923-2012)". feministsindia.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2012.
- ↑ Studies on women in South East Asia: a status report (PDF). பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
- ↑ "PRM : Programme Structure". Archived from the original on 13 March 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-07-16.