லீலா சிட்னீஸ்
லீலா சிட்னீஸ் | |
---|---|
பிறப்பு | தார்வாடு, மும்பை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 9 செப்டம்பர் 1912
இறப்பு | 14 சூலை 2003 கனெடிகட், அமெரிக்க ஐக்கிய நாடு | (அகவை 93)
பணி | நாடக மற்றும் திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1930கள்-1980கள்[1] |
லீலா சிட்னீஸ் (Leela Chitnis) (9 செப்டம்பர் 1912 - 14 ஜூலை 2003) இந்திய திரைப்பட துறையில் நடிகையாக, 1930 களில் இருந்து 1980 கள் வரை செயல்பட்டார். திருமணத்திற்கு முன் அவரது பெயர் லீலா நாகர்கார் என்பதாகும். (Leela Nagarkar). ஆரம்பகாலங்களில் காதல் படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னாட்களில் முன்னணி நடிகர்களுக்கு நேர்மையும் அறமும் உடைய தாயாக நடித்து மிகவும் புகழ் பெற்றார்.[1]
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாடில், மராத்தி மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆங்கில இலக்கியப் பேராசிரியராக இருந்தார். அக்காலத்தில் படித்த கதாநாயகிகளில் இவரும் ஒருவர். கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு அவர் நாட்டியமன்வன்தார் என்ற மராட்டிய நாட்டியக் குழுவில் சேர்ந்தார். இப்சென் , ஷா மற்றும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி ஆகியோரின் பாதிப்புடைய கதைகளை இந்நாடகக்குழு அரங்கேற்றி வந்தனர். இக்குழுவில் பல நகைச்சுவை மற்றும் சோக நாடகங்களில் தொடர்ச்சியாக கதாநாயகியாக நடித்துவந்தார்.[2]
தொழில் வாழ்க்கை
[தொகு]பாம்பே டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திற்காகப் பல கதைகளில் கதா நாயகியாக நடித்துள்ளார். இந்நிறுவனம் சமுதாய மறுமலர்ச்சி தொடர்பாக பல படங்களைத் தயாரித்து வந்தது. இப்படங்கள் யாவும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. கங்கன் (1939) திரைப்படத்தில் லீலா நடித்து பாம்பே டாக்கீஸ் தயாரித்து வெளியான படம் பெரும் வெற்றிபெற்றது.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சிட்னி பிராமண சாதியைச் சேர்ந்தவர்.[4] எனினும், அவரது தந்தை பிரம்ம சமாஜ கொள்கையான, சாதி மறுப்பு மத இயக்கத்தை ஏற்றுக்கொண்டார். லீலா 2003 இல் அமெரிக்காவில் மரணமடைந்தார்.[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Leela Chitnis, 91, an Actress In Scores of Bombay Movies". https://www.nytimes.com/2003/07/17/movies/leela-chitnis-93-an-actress-in-scores-of-bombay-movies.html. பார்த்த நாள்: 20 September 2015.
- ↑ "Leela Chitnis" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்).
- ↑ "LEELA CHITNIS (1909-2003)".
- ↑ https://www.nytimes.com/2003/07/17/movies/leela-chitnis-93-an-actress-in-scores-of-bombay-movies.html
- ↑ "Leela Chitnis dead". The Hindu. 16 Jul 2003. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)