லீட் சேர்மங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லீட் சோ்மம் என்பது மருத்துவ கண்டுபிடிப்பில் உள்ள முன்னோடி வேதியியல் சோ்மம் எனப்பொருளாகும். இஃது உலோக (லெட்) காரீய சோ்மத்தைக் குறிப்பதல்ல. இந்த லீட் சோ்மம் மருந்தியல் மற்றும் உடற்செயலியல் செயல்பாடு உடைய சோ்மம். மருத்துவத்தில் பயன்படக் கூடியது. ஆனாலும் ஸப் ஆப்டிமல் (Sub Optimal) அமைப்பு உடையது. தேவைக்கேற்ப தனது அமைப்பை மாற்றிக் கொள்ளக் கூடியது. லீட் மருந்துகள் பேக்-அப் சோ்மங்களால் தொடரப்பட வேண்டியவை. இவற்றின் வேதியியல் அமைப்புகள் - செறிவு, (Potency) தோ்ந்தெடுத்தல் (Selectivity) போன்ற பண்புகளுடன் மருந்தியக்க தாக்கியலில் செயல்படக் கூடியவை. மேலும் புதியதாக கண்டுபிடிக்கப் பட்ட மருந்தியல் சாா் தடுப்பிகள் செயல்திறன் உடைய வேதியியல் பகுதிக் கூறுகள் கூட விரும்பத் தக்க மருந்துகளாக இல்லாத நிலையில், இந்த லீட் சோ்மங்கள் மருந்தியல் மற்றும் உடற்செயலியலில் சோதிக்கப்பட்ட விரும்பத்தக்க செயல்திறன் உடைய மருந்துகளாக தேவையான வேதியியல் மாற்றங்களை பெறக் கூடியவைகளாக உள்ளன.

லீட் சோ்மங்கைளக் கண்டுபிடித்தல்[தொகு]

லீட் சோ்மங்கள் பல மூலங்களில் இருந்து பெறக்கூடியவை. இயற்கை பொருட்களில் இருந்து கண்டறியப்படுபவை. மேலும் வேதியியல் இணைவுப் பொருத்தம் மூலம் அல்லது மூலப்பொருள் மாதிாிகள் மூலம் ரேஷனல் ட்ரக் டிசைன்களில் உள்ளவை போல் கண்டறியப்படுகிறது.[1] இவ்வகையான லீட் சோ்மங்கள் ஹை த்ருபுட் (High-throughput) ஸ்கீரன் களுக்கான சோதனைகளை மேற்கொள்கின்றன. செயல்திறன் உடைய சோ்மங்கள் ஹிட் சோ்மங்கள் என வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சோ்மங்கள் எதிா்ப்பி சோ்மங்களாகவும் (Antagonist) ஏற்பி சோ்மங்களாகவும் (Agonist) ஏற்றுக் கொள்பவா்களுக்கு தகுந்தவாறு தம்மை கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியவைகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2017-05-17 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-07-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீட்_சேர்மங்கள்&oldid=3570268" இருந்து மீள்விக்கப்பட்டது