லில்லியன் கிளார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லில்லியன் கிளார்க்
பிறப்பு1866
இறப்பு1934
தேசியம்ஆங்கிலேயர்
பணிதாவரவியலாளர், ஆசிரியர்
அறியப்படுவதுநிறுவனர் - தாவரவியல் தோட்டங்கள்

லில்லியன் கிளார்க் (Lillian Clarke, 1866-1934) தாவரவியல் ஆசிரியராக இங்கிலாந்திலுள்ள ஜேம்ஸ் ஆலன்ஸ் பெண்கள் பள்ளியில் 1896 ஆம் ஆண்டு முதல் 1926 ஆண்டு வரை பணியாற்றினார். இங்கிலாந்துப் பள்ளிகளுள் முதன்முதலாக அப்பள்ளி வெளியில், தாவர வளர்ச்சி மற்றும் மகரந்தச்சேர்க்கையை மாணவர்கள் கற்கும்வண்ணம் அவர் தொடங்கிய தோட்டங்கள் பின்னர் தாவரவியல் தோட்டங்கள் என அழைக்கப்பட்டன.

ஜேம்ஸ் ஆலன்ஸ் பெண்கள் பள்ளியில் தாவரவியல் கல்விமுறை மேம்பாடு குறித்த ஆய்வை மேற்கொண்டதன் மூலம் இலண்டன் பல்கலைக்கழகத்திடமிருந்து 1917 ஆம் ஆண்டில் அறிவியல் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. Fogg, E. (1934) Lilian J. Clarke obituary, Proceedings of the Linnean Society of London October 1933- May 1934, London: Linnean Society
"https://ta.wikipedia.org/w/index.php?title=லில்லியன்_கிளார்க்&oldid=3208537" இருந்து மீள்விக்கப்பட்டது