லியோ டால்ஸ்டாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லியோ ரொல்சுரோய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லியோ டால்ஸ்டாய்

பிறப்பு லியோ டால்ஸ்டாய்
Leo Tolstoy
ஆகத்து 28, 1828(1828-08-28)
யாஸ்னயா பொல்யானா, ரஷ்யப் பேரரசு
இறப்பு நவம்பர் 20, 1910(1910-11-20) (அகவை 82)
அஸ்டாபோவா, ரஷ்யப் பேரரசு
தொழில் புதின எழுத்தாளர்
இலக்கிய வகை உண்மைவாதி
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
போரும் அமைதியும்
அன்னா கரேனினா

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் (Lev Nikolayevich Tolstoy, செப்டம்பர் 9 [யூ.நா. ஆகஸ்ட் 28] 1828 – நவம்பர் 20 [யூ.நா. நவம்பர் 7] 1910) (ரஷ்ய மொழி: Лев Никола́евич Толсто́й, உச்சரிப்பு: லியேவ் நிக்கலாயெவிச் தல்ஸ்தோய், இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க, ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவர் புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார். இவரது மிகச் சிறந்த ஆக்கங்களான போரும் அமைதியும், அன்னா கரேனினா ஆகியவை, 19 ஆம் நூற்றாண்டு ரஷ்ய வாழ்க்கையை விபரிப்பதில் உண்மைவாதப் புனைகதைகளின் உயர்நிலையைக் காட்டுகின்றன.

கட்டுரையாளர், நாடகாசிரியர், கல்விச் சீர்திருத்தவாதி என டாஸ்டாயின் பிற திறமைகள் இவரை உயர்குடி டால்டாய் குடும்பத்தின் செல்வாக்குள்ள உறுப்பினராக ஆக்கின.

வரலாறு[தொகு]

லியோ டால்ஸ்டாய், மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில் பிறந்தார். டால்ஸ்டாய்கள் ரஷ்யாவில் பெயர்பெற்ற பழைய பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ரஷ்ய உயர்குடியின் பெரும் குடும்பங்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள். அலெக்சாண்டர் புஷ்கின், லியோ டால்ஸ்டாயின் உறவினராவார். லியோ டால்ஸ்டாய் வகுப்பு உணர்வு கொண்டவராக இருந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோ_டால்ஸ்டாய்&oldid=2210274" இருந்து மீள்விக்கப்பட்டது