லியோ மைக்கெல் தோயாட்
லியோ மைக்கெல் தோயாட் Leo Michael Toyad | |
|---|---|
| மலேசிய சுற்றுலா அமைச்சர் | |
| பதவியில் 27 மார்ச் 2004 – 14 பெப்ரவரி 2006 | |
| முன்னையவர் | அப்துல் காதிர் பட்சிர் |
| பின்னவர் | தெங்கு அட்னான் மன்சோர் |
| மலேசிய வெளியுறவு துணையமைச்சர் | |
| பதவியில் 4 மே 1995 – 26 மார்ச் 2004 | |
| பின்னவர் | ஜோசப் சலாங் கண்டும் |
| மலேசிய கல்வி துணையமைச்சர் | |
| பதவியில் 11 ஆகத்து 1986 – 4 மே 1995 Serving with போங் சான் ஓன் | |
| நாடாளுமன்ற உறுப்பினர் முக்கா மக்களவைத் தொகுதி | |
| பதவியில் 1982 – 9 மே 2018 | |
| முன்னையவர் | எட்வர்ட் எசுனென் உனாங் |
| பின்னவர் | அனிபா அசார் தாயிப் |
| பெரும்பான்மை | 3,083 (1986); 8,305 (1990); போட்டி இல்லை (1995); 7,567 (1999); 9,178 (2004); 6,298 (2008); 12,764 (2013) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | Leo Michael Toyad 11 ஏப்ரல் 1950 முக்கா, சரவாக் பிரித்தானிய முடியாட்சி |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | |
| பிற அரசியல் தொடர்புகள் | |
| துணைவர் | மட்டில்டா கோ கிம் லுவான் |
| பிள்ளைகள் | 4 |
| பணி | அரசியல்வாதி |
டான் செரி லியோ மைக்கெல் தோயாட் எனும் முகமது லியோ மைக்கெல் தோயாட் பின் அப்துல்லா (ஆங்கிலம்; மலாய்: Leo Michael Toyad எனும் Muhammad Leo Michael Toyad bin Abdullah) (பிறப்பு: 11 ஏப்ரல் 1950) என்பவர் மலேசிய அரசியல்வாதி; 1982 முதல் 9 மே 2018 வரை சரவாக், முக்கா மக்களவைத் தொகுதியின் (P213) நாடாளுமன்ற உறுப்பினராக 32 ஆண்டுகாலம் பதவி வகித்தவர் ஆவார்.
இவர் பாரிசான் நேசனல் (BN) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சியின் (Parti Pesaka Bumiputera Bersatu) உறுப்பினர் ஆவார்.
அரசியல்
[தொகு]லியோ மைக்கெல் தோயாட் முதன்முதலில் 1982 மலேசியப் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987-இல், பிரதமர் மகாதீர் முகமதுவால் அவர் வெளியுறவுத் துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1]
2004 மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பிறகு, அவர் பிரதமர் அப்துல்லா அகமது படாவியின் அமைச்சரவையில் மலேசிய சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][3]
2006-ஆம் ஆண்டில், மலேசியர்களை வியப்பில் ஆழ்த்திய ஒரு நடவடிக்கையாக, லியோ மைக்கெல் தோயாட் மலேசிய அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் நியமிக்கப்பட்டார்.[3] 2008 மலேசியப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஓய்வு பெறும் தமது விருப்பத்தை தெரிவித்திருந்தார். ஆனாலும் அவர் மீண்டும் போட்டியிட்டு, 2008 மலேசியப் பொதுத் தேர்தலிலும் மீண்டும் 2013 மலேசியப் பொதுத் தேர்தலிலும் தமது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Petition to ask seven-term Mukah MP to step down handed to PBB secretariat". The Star. 24 March 2012. http://www.thestar.com.my/story/?file=%2f2012%2f3%2f24%2fsarawak%2f10977113&sec=sarawak. பார்த்த நாள்: 22 November 2014.
- ↑ Sulong, Wong (28 March 2004). "Cabinet shaped by realities". The Star (Star Publications (Malaysia)). http://thestar.com.my/news/story.asp?file=/2004/3/28/nation/7643956&sec=nation. பார்த்த நாள்: 21 April 2010.
- 1 2 Chun Wai, Wong. "PM's choice stuns veterans". The Star (Star Publications (Malaysia)). http://thestar.com.my/news/story.asp?file=/2006/2/15/nation/13398770&sec=nation. பார்த்த நாள்: 21 April 2010.
- ↑ Wong, Jack; Ling, Sharon (22 February 2008). "Taib will not defend Kota Samarahan seat". The Star (Star Publications (Malaysia)) இம் மூலத்தில் இருந்து 22 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110622013509/http://thestar.com.my/news/story.asp?file=%2F2008%2F2%2F22%2Fnation%2F20409061&sec=nation. பார்த்த நாள்: 21 April 2010.