லியோன் மார்ச்லெவிசுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியோன் மார்ச்லெவிசுக்கி

லியோன் பாவெல் தியோதர் மார்ச்லெவிசுக்கி (Leon Paweł Teodor Marchlewski) என்பவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் மற்றும் போலந்து வேதியியல் கழகத்தின் கௌரவ உறுப்பினர் ஆவார். 1869 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி போலந்தின் வுலோகிளாவெக் நகரத்தில் பிறந்த இவர் 1946 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 அன்று இறந்தார் [1]. குளோரோபில் எனப்படும் பச்சையம் நிறமி குறித்த வேதியியல் துறையின் நிறுவனர்களில் ஒருவராக லியோன் இருந்தார் [2]. 1927 ஆம் ஆண்டில் பாரிசு நகரில் வேதியியல் தொடர்பான அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்ள இவர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார் [3]. இவர் பயன்படுத்திய அரசு வழங்கிய அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டு வலதுபுறம் உள்ளது.

போலந்து அரசு லியோனுக்கு வழங்கிய அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டு

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]