லியோனார்ட் பெல்டியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லியோனார்ட் பெல்டியர்
Leonard Peltier headshot from FBI Poster - 01.gif
லியோனார்ட் பெல்டியர் 1972 இல்
பிறப்புசெப்டம்பர் 12, 1944 (1944-09-12) (அகவை 77)
வடக்கு டகோடா
இனம்டகோடா ( Anishinabe-Dakota people)
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
பெற்றோர்லியோ பெல்டியர், அல்வினா ரோபிடியூ

லியோனார்ட் பெல்டியர் (செப்டம்பர் 12, 1944) செவ்விந்திய அமெரிக்க அரசியல் கைதி. இவர் செவ்விந்திய இயக்கத்தின் உறுப்பினர் (American Indian Movement (AIM)). ஜூன் 26, 1975 அன்று நடந்த ஒரு போராட்டத்தில் அமெரிக்க அரசின் துப்பறியும் துறையின் (FBI) இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தண்டனைக்குள்ளானவர். மிகவும் நியாயமற்ற முறையில் நடந்த விசாரணையாக இவர் மேலான இந்தக் குற்றச்சாட்டுக்கான விசாரணை குறிப்பிடப்படுகின்றது.[1] இவரது தன்வரலாற்றுப் புத்தகம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]இவர் மேலான குற்றச்சாட்டும், யார் குண்டு பாய்ந்து அவர்கள் இறந்தார்கள் என்பது பெல்டியருக்குமே தெரியாது என்பதும், எனினும் இவரை சிக்கவைத்தமையும், சிறைக்குள் இவர் சந்தித்த பிரச்சனைகளும், அடைத்துவைக்கப்பட்ட சிறையில் எங்கோ இருந்து வந்து விழும் புறாவின் சிறகு தரும் ஆறுதலும், செவ்விந்தியர்களது மத நம்பிக்கைப்படி புறாவின் சிறகுகள் புனிதமானவை எனும் தகவல்களும் அடங்கிய ஒரு புத்தகமாக இதனை அமைத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]