உள்ளடக்கத்துக்குச் செல்

லியோனல் எம்மெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வென்ற பதக்கங்கள்
ஆண்கள் வளைகோற் பந்தாட்டம்
நாடு  இந்தியா
தங்கப் பதக்கம் – முதலிடம் 1936 பெர்லின் அணி

லியோனல் எம்மெட்டு (Lionel Emmett) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோற்பந்தாட்ட வீரராவார். ஒரு மருத்துவராகவும் அறியப்படும் இவர் லியோனல் சார்லசு ரென்விக் எம்மெட்டு என்ற பெயராலும் அறியப்படுகிறார். 1913ஆம் ஆண்டு சனவரி மாதம் 8ஆம் தேதியன்று பிறந்தார். 1936ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். தங்கப் பதக்கம் வென்ற இந்திய வளைகோற்பந்தாட்ட அணியில் ஓர் உறுப்பினராக இருந்தார். அணியில் முன்கள வீரராக விளையாடினார்.

எம்மெட்டு 1913ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தார். கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பயிற்சி பெற்றார். இந்தியா மற்றும் பர்மாவில் உள்ள கள மருத்துவமனைகளில் இந்திய இராணுவப் படையில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார். லெப்டினண்டு கர்னல் பதவிக்கு உயர்ந்தார். பின்னர், அசாமின் தேயிலைத் தோட்டங்களில் பொது பயிற்சியாளராகப் பயிற்சி பெற்றார். ஓய்வு பெற்ற பிறகு, 1960 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றார். காப்பர் ஒமேகா என்ற கருப்பையக கருத்தடை சாதனத்திற்கு காப்புரிமை பெற்றார்.[1] மேலும் எம்மெட்டு திரெட்டு ரெட்ரீவர் மற்றும் எம்மெட்டு திரெட்டு டிடெக்டர் என்ற இரண்டு மருத்துவ சாதனங்களை உருவாக்கினார். 1996 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 9ஆம் தேதியன்று காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Obituaries". British Medical Journal 313 (7066): 1202. 9 November 1996. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோனல்_எம்மெட்டு&oldid=4298999" இலிருந்து மீள்விக்கப்பட்டது