லியோத்ரிக்சு
Appearance
லியோத்ரிக்சு | |
---|---|
வெள்ளிக்காது மெசியா, லியோத்ரிக்சு அர்குலேரிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | லியோத்ரிக்சு சுவைன்சன், 1832
|
மாதிரி இனம் | |
லியோத்ரிக்சு லுடியா[1] = சில்வியா லுடியா தெம்னிக், 1824 | |
சிற்றினங்கள் | |
|
லியோத்ரிக்சு (Leiothrix) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள பாசரைன் பறவைகளின் பேரினமாகும். இவை லியோசிச்லாசு, பார்விங்ஸ், மின்லா மற்றும் சிபியா ஆகியவற்றைக் கொண்ட ஒரு உயிரிக்கிளையினைச் சேர்ந்தவை. சிபியா இவற்றின் நெருங்கிய உறவினர்களாக இருக்கலாம்.
வகைப்பாட்டியல்
[தொகு]லியோத்ரிக்சு பேரினமானது 1832ஆம் ஆண்டில் இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் வில்லியம் ஜான் ஸ்வைன்சனால் அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3] பேரினப் பெயர் பண்டைய கிரேக்க லியோசு அதாவது "மென்மையான" மற்றும் திரிக்சு "முடி" என்று பொருள்படும்.[4] லியோத்ரிக்சு பேரினத்தின் மாதிரி இனமாக செவ்வலகு லியோத்திரிக்சு உள்ளது.
இப்பேரினம் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[5]
படம் | விலங்கியல் பெயர் | பொது பெயர் | விநியோகம் |
---|---|---|---|
லியோத்ரிக்சு அர்ஜென்டாரிசு | வெள்ளிக் காது மெசியா | தென்கிழக்கு ஆசியா | |
லியோத்ரிக்சு லுடியா | செவ்வலகு லியோத்ரிக்சு அல்லது "பெக்கின் நைட்டிங்கேல்", | இந்தியா, பூட்டான், நேபாளம், மியான்மர் மற்றும் திபெத்தின் சில பகுதிகள். |
இவற்றின் மென்மையான வண்ணங்களும், திறமையான பாடலும் இச்சிற்றினத்தினைப் பிரபலமான செல்லப் பறவைகளாக ஆக்குகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Leiothrichidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ Swainson, William John; Richardson, J. (1831). Fauna Boreali-Americana, or, The Zoology of the Northern Parts of British America. Vol. 2: The Birds. London: J. Murray. pp. 233, 490.
- ↑ Check-List of Birds of the World. Vol. 10. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. 1964.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm.
- ↑ "Laughingthrushes and allies". IOC World Bird List Version 12.1. International Ornithologists' Union. January 2022. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
- Cibois, Alice (2003): Mitochondrial DNA Phylogeny of Babblers (Timaliidae). Auk 120(1): 1-20. DOI: 10.1642/0004-8038(2003)120[0035:MDPOBT]2.0.CO;2 HTML fulltext without images
- Collar, N. J. & Robson C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.