உள்ளடக்கத்துக்குச் செல்

லியான் வென்ஃபெங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியான் வென்ஃபெங்
梁文锋
தாய்மொழியில் பெயர்梁文锋
பிறப்பு1985
சான்ஜியாங், குவாங்டொங் மாகாணம், சீனா
கல்விசெஜியாங் பல்கலைக்கழகம், முதுநிலை தகவல் தொழில்நுட்ப பொறியியல்
அறியப்படுவதுடீப்சீக்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
லியான் வென்ஃபெங்
துறைதகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்
ஆய்வேடுகுறைந்த விலை PTZ புகைப்பட கருவியை அடிப்படையாகக் கொண்ட இலக்கு கண்காணிப்பு வழிமுறை குறித்த ஆராய்ச்சி. (2010)
ஆய்வு நெறியாளர்சியாங் சியூ

லியான் வென்ஃபெங் (Liang Wenfeng), சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் உள்ள சான்ஜியாங் நகரத்தில் 1985ஆம் ஆண்டில் பிறந்தவர். செஜியாங் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தகவல் தொழில்நுட்ப பொறியியல் படித்த பட்டதாரி. குறைந்த விலை PTZ புகைப்பட கருவியை அடிப்படையாகக் கொண்ட இலக்கு கண்காணிப்பு வழிமுறை குறித்த ஆராய்ச்சி செய்தவர்.

தொழில் முனைவோர் ஆக மாறிய இவர் தொடக்கநிலை வணிகத்தை துவக்கி ஹை-பிளையர் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டார். பின் 2023ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான டீப்சீக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியாக செயல்படுத்தி செயற்கை நுண்ணறி தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, சனவரி 2025ஆம் ஆண்டில் டீப்சீக் எனும் கைபேசி செயலியை கண்டுபிடித்து, அதனை பொதுமக்கள் பயன்படுத்த சனவரி 2025ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு விலையின்றி கொடுத்தார்.[1][2]

இதனால் பிற நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு செயலிகளை பின்னுக்குத் தள்ளி தற்போது லியான் வென்ஃபெங்கின் டீப்சீக் செயலியானது கணினி மற்றும் திறன்பேசி உலகில் முன்னிலை வகிக்கிறது.[3][4]

லியான் வென்ஃபெங் குறைந்த முதலீட்டில் டீப்சீக் செயற்கை நுண்ணறிவு செயலியை கண்டுபிடித்த காரணத்தால், செயற்கை நுண்ணறிவு செயலிகள் வழங்கும் என்விடியா, ஓபின்ஏஐ, சட் யிபிடி மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா போன்ற அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி கண்டது. 27 சனவரி 2025 அன்று என்விடியா நிறுவனத்தின் 6,00 பில்லியன் டாலர் மதிப்பில் பங்குகள் வீழ்ச்சியுற்றது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியான்_வென்ஃபெங்&oldid=4395249" இலிருந்து மீள்விக்கப்பட்டது