உள்ளடக்கத்துக்குச் செல்

லியாகத்-நேரு ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லியாக்கத்-நேரு ஒப்பந்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லியாகத்-நேரு ஒப்பந்தம்
Liaquat–Nehru Pact
சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான இந்திய, பாக்கித்தான் அரசுகளுக்கிடையேயான உடன்பாடு
ஒப்பந்த வகைஉரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான புரிந்துணர்வு
அமைப்புபனிப்போர்
வரைவுஏப்ரல் 2, 1950
கையெழுத்திட்டதுஏப்ரல் 8, 1950; 74 ஆண்டுகள் முன்னர் (1950-04-08)
இடம்புது தில்லி, இந்தியா
நிலைRatifications of Both Parties
முடிவுக்காலம்ஏப்ரல் 8, 1956 (1956-04-08)
மத்தியஸ்தர்கள்இந்திய, பாத்தித்தான் அரசுகளின் மனித உரிமைகள் அமைச்சுகள்
பேச்சுவார்த்தை நடத்துபவர்கள்இந்திய, பாக்கித்தான் வெளியுறவுத்துறை அமைச்சுகள்
கையெழுத்திட்டோர்ஜவகர்லால் நேரு
(இந்தியப் பிரதமர்)
லியாகத் அலி கான்
(பாக்கித்தான் பிரதமர்)
தரப்புகள் இந்தியா
 பாக்கித்தான்
அங்கீகரிப்பவர்கள்இந்திய நாடாளுமன்றம்
பாக்கித்தான் நாடாளுமன்றம்
வைப்பகங்கள்இந்திய, பாக்கித்தான் அரசுகள்
மொழிகள்இந்தி, உருது, ஆங்கிலம்

லியாகத்-நேரு ஒப்பந்தம் அல்லது தில்லி ஒப்பந்தம் 1950 (Liaquat–Nehru Pact or Delhi Pact) என்பது 1950 ஏப்ரல் 8 ஆம் நாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, மற்றும் பாக்கித்தான் பிரதமர் லியாகத் அலி கான் ஆகியோருக்கிடையில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்பாடு ஆகும்.[1] இந்தியப் பிரிவினையை அடுத்து, மேலும் பிரிவினைகளையும், கலவரங்களையும் தடுக்கும் பொருட்டு, தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெற்ற உச்சக் கட்டப் பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இவ்வுடன்பாடு புது தில்லியில் கையெழுத்திடப்பட்டது. அகதிகள் எவ்வித இடைஞ்சல்களும் இன்றித் தமது உடைமைகளை விற்க அனுமதிக்கப்படல், கடத்தப்பட்டோர் விடுவிக்கப்படல், சூறையாடப்பட்ட பொருட்களை மீள ஒப்படைத்தல், கட்டாய மதமாற்றம் அங்கீகரிக்கப்படாமை, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பு ஆகிய முக்கிய உடன்பாடுகள் இரு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்டன.

இரு நாடுகளிலும் சிறுபான்மை ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன. கிழக்குப் பாக்கித்தானில் இருந்து (இன்றைய வங்காளதேசம்) இந்தியாவின் மேற்கு வங்கத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் இடம்பெயர்ந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. நேரு-லியாகத் ஒப்பந்தம் - தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியாகத்-நேரு_ஒப்பந்தம்&oldid=3878698" இலிருந்து மீள்விக்கப்பட்டது