உள்ளடக்கத்துக்குச் செல்

லிம் கோக் விங் படைப்பாற்றல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 2°56′24″N 101°39′45″E / 2.94000°N 101.66250°E / 2.94000; 101.66250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிம் கோக் விங் பல்கலைக்கழகம்
Limkokwing University of Creative Technology
Universiti Teknologi Kreatif Limkokwing
லிம் கோக் விங் பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்கள்
Limkokwing University College of Creative Technology (2000–2010), Limkokwing Institute of Creative Technology (1991–2000)
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1991
மாணவர்கள்30,000+
அமைவிடம்
2°56′24″N 101°39′45″E / 2.94000°N 101.66250°E / 2.94000; 101.66250
வளாகம்சைபர்ஜெயா, கூச்சிங், காபரோனி, நோம் பென், மசேரு, இலண்டன், இம்பபான், பிரீடவுன், நமதாபா (உகாண்டா)
மொழிஆங்கிலம்
இணையதளம்www.limkokwing.net
Map
லிம் கோக் விங் படைப்பாற்றல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைவிடம்

லிம் கோக் விங் படைப்பாற்றல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (மலாய்: Universiti Teknologi Kreatif Limkokwing; ஆங்கிலம்: Limkokwing University of Creative Technology அல்லது Limkokwing; (LUCT) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டம், சைபர்ஜெயா நகரில் உள்ள ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். 1991-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களில் வளாகங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் அதன் முதன்மை வளாகத்தைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.[1]

வடிவமைப்பு, பல்லூடகம், தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் தொழினுட்பம் உள்ளிட்ட பல்வேறு படிப்புத் துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை நிலைகளில் பரந்த அளவிலான கல்வித் திட்டங்களை இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகிறது.[2]

கல்வித் திட்டங்களுக்கும் மேலதிகமாக; விளையாட்டு நிகழ்வுகள், நிகழ்த்துக் கலைகள், பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சமூகச் சேவை உள்ளிட்ட பாடநெறிகளுக்கு அப்பாற்பட்ட பல்வேறு செயல்பாடுகள், மன்றங்கள், மாணவர்கள் பங்கேற்பதற்கான அமைப்பு வசதிகளையும் இந்தப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.[1]

வரலாறு

[தொகு]

லிம் கோக் விங் பல்கலைக்கழகம் (LUCT), 1991-ஆம் ஆண்டு லிம் கோக் விங் (Lim Kok Wing) என்பவரால் நிறுவப்பட்டது. 2002-ஆம் ஆண்டு, பல்கலைக்கழகக் கல்லூரியாக நிறுவப்பட்ட முதல் தனியார் கல்லூரி என்ற பெருமையைப் பெற்றது.

வளாகங்கள்

[தொகு]

திசம்பர் 2018 நிலவரப்படி, லிம் கோக் விங் பல்கலைக்கழகம் பின்வரும் வளாகங்களைக் கொண்டிருந்தது:

கல்வித் திட்டங்கள்

[தொகு]

2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, லிம் கோக் விங் பல்கலைக்கழகம் இரண்டு சான்றிதழ் படிப்புகளையும்; இருபத்தி இரண்டு இளங்கலை பட்டப் படிப்புகளையும் வழங்குகிறது.[11]

தரவரிசை பட்டியல்

[தொகு]
ஆண்டு தரவரிசை மதிப்பீட்டாளர்
2012 251-300 கியூஎஸ் உலகத் தரவரிசை
2013 251-300 கியூஎஸ் உலகத் தரவரிசை
2014 251-300 கியூஎஸ் உலகத் தரவரிசை
2015 251-300[12] கியூஎஸ் உலகத் தரவரிசை
2016 251-300 கியூஎஸ் உலகத் தரவரிசை
2017 251-300 கியூஎஸ் உலகத் தரவரிசை
2018 218 கியூஎஸ் உலகத் தரவரிசை
2019 351-400 கியூஎஸ் உலகத் தரவரிசை

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 BHD, STUDYMALAYSIA SDN. "Limkokwing University of Creative Technology (LUCT) - Creative Destination for the World - Founded in 1991, the University has established worldwide recognition through its innovative brand of creative education merging the best of East and West learning". StudyMalaysia.com (in ஆங்கிலம்). Retrieved 28 November 2025.
  2. Creation, Centre For Content. "50 Years of Nation Building". limkokwing.com (in ஆங்கிலம்). Retrieved 28 November 2025.
  3. "Botswana: Shifting policies benefit Malaysian private university". University World News. 2 March 2008. Retrieved 5 December 2018.
  4. Unipage.net (2018). "About Limkokwing University of Creative Technology Cambodia". Unipage.net. Retrieved 5 December 2018.
  5. "Limkokwing University plans to extend TVET Malaysia to Lesotho". Bernama.com. 16 October 2018. Retrieved 5 December 2018.
  6. Liveandstudymalaysia.com (2018). "Limkokwing University: Main Campus". Liveandstudymalaysia.com. Retrieved 5 December 2018.
  7. Swazi Media (15 March 2018). "Police Fire During Student Roadblock". Swazi Media Commentary. Retrieved 6 December 2018.
  8. Hanis Zainal (18 March 2018). "Limkokwing's Sierra Leone campus opens". The Star (Malaysia). Retrieved 6 December 2018.
  9. Opio, Alfred (14 April 2014). "Malaysians to Open University in Namataba". Kampala: Chimp Reports Uganda. Retrieved 5 December 2018.
  10. Mukhaye, Damali (5 December 2018). "Malaysian varsity takes over Ugandan institute". Daily Monitor. Kampala. Retrieved 5 December 2018.
  11. "Courses @ Limkokwing University of Creative Technology". Limkokwing University of Creative Technology. Retrieved 2022-09-06.
  12. "Limkokwing University of Creative Technology". Quacquarelli Symonds. Retrieved 17 September 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]