லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா
Lipstick Under My Burkha
இயக்கம்ஆலங்கிரிதா ஸ்ரீவாஸ்தவா
தயாரிப்புபிரகாஷ் ஜா & ஜேபி அங்கீல்ஸ்
திரைக்கதைஆலங்கிரிதா ஸ்ரீவாஸ்தவா
இசை
  • சபன்னிசா பங்காஷ்
  • மங்கேஷ் தக்டி
நடிப்பு
  • கொங்கண சென் செர்மா
  • ரத்னா பாத்தக்
  • ஆஹானா குமாரா
  • பிளபித்தா போர்த்தாகூர்
  • சுஷந்த் சிங்
  • வைபவ் தத்வாவாடி
  • விக்ரண்ட் மாஸ்ஸி
ஒளிப்பதிவுஅக்சை சிங்
படத்தொகுப்புசாரு ஸ்ரீ ராய்
வெளியீடு21 சூலை 2017 (2017-07-21)(India)
8 செப்டம்பர் 2017 (2017-09-08)(USA)
ஓட்டம்117 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தியா
ஆக்கச்செலவு6 கோடி[1]
மொத்த வருவாய்26.68 கோடி[2]

லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா (Lipstick Under My Burkha) என்பது 2017 ஆண்டைய இந்தியத் திரைப்படமாகும். இதை எழுதி இயக்கியவர் ஆலங்கிரிதா ஸ்ரீவாஸ்தவா[3] படத்தை தயாரித்தவர் பிரகாஷ் ஜா.[4][5][6][7] இப்படத்தில் கொங்கண சென் ஷர்மா, ரத்னா பாதக், ஆஹானா குமாரா, பிளபீட்டா போர்த்தகரூர் ஆகியோர் முன்னணி பாத்திரங்களிலும்,[8] இவர்களுடன் சுஷந்த் சிங், விக்ரன் மஸ்ஸி, ஷஷாங்க் அரோரா, வைபவ் தத்வாவாடி, ஜகத் சிங் சோலங்கி ஆகியோரும் நடித்துள்ளனர்.[9][10] படத்தின் முதல் முன்னோட்டம் 2016 அக்டோபர் 14 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் டோக்கியோ மற்றும் மும்பை திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது, அங்கு ஸ்பிரிட் ஆஃப் ஆசியா பரிசு மற்றும் பாலின சமத்துவத்தின் சிறந்த திரைப்படத்திற்கான ஆக்ஸ்பாம் விருது ஆகியவற்றை வென்றது. இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[11][12]

கதை[தொகு]

ஜீன்ஸ் ஆடை அணிந்து சுதந்திரமாக வாழும் ஆசை கொண்ட இஸ்லாமியப் பெண் ஒருவர், அனுதினமும் புர்கா தைப்பதிலேயே தனது பருவத்தைக் கழிக்க நேர்கிறது. விரும்பிய காதலனை மணக்க முடியாமல் தாய் செய்துவைத்த திருமணத்துக்கு ஆளாகும் பெண் ஒருவர், தனது சமூக மரபுக்கெதிரான தன் எதிர்ப்பைக் காட்டுகிறார். திருமண நிச்சயதார்த்தன்றே தன் காதலனுடன் உறவுகொள்கிறார். மற்றொரு மணமான இஸ்லாமியப் பெண்ணோ பணியிடத்தில் திறம்படச் செயலாற்றுகிறாள்; படுக்கையிலோ அவளை உறவுகொள்வதற்கான இயந்திரம் போல் பயன்படுத்துகிறான் கணவன். 50 வயதைக் கடந்த மற்றொரு பெண் தனது பெயரைக் கூட மறக்கும் அளவுக்குப் புற உலகினரால் நடத்தப்படுகிறார். தனக்கு நீச்சல் கற்றுத்தரும் இளைஞனிடம் மேற்கொள்ளும் தொலைபேசி உரையாடல் வழியே புதியதொரு உலகத்தைத் தரிசிக்கிறார்.

இந்த நால்வரையும் அவர்களைக் குற்றம் சுமத்த எந்தத் தகுதியுமற்ற ஆண்கள் அற்பக் காரணங்களுக்காகக் குற்றப்படுத்துகிறார்கள். பெண்களின் எந்தக் கனவையும் புரிந்துகொள்ளாத ஆண்கள், இதற்கெல்லாம் தகுதியற்றவர்கள் என்கிறார் இயக்குநர்.

மேற்கோள்கள்[தொகு]