உள்ளடக்கத்துக்குச் செல்

லிபரேஷன் (நாளிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லிபரேஷன் (IPA: [li.be.ʁa.sjɔ]) ஒரு பிரஞ்சு நாளிதழ் ஆகும். இது ஜீன் பால் சார்ட்ரே மற்றும் செர்ஜ் ஜூலையால் 1968 மே எதிர்ப்பு இயக்கங்களை ஒட்டி, பாரிசில் 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

முதலில் ஒரு தீவிர இடதுசாரி நாளிதழாக இருந்த இது 1980 மற்றும் 1990 களில் பல மாற்றங்கள் பெற்று சமூக ஜனநாயக நிலைப்பாட்டை எடுக்க ஆரம்பித்தது. 2007 ஆம் ஆண்டில், இதன் பிரதிகள் சுமார் 140,000 புழக்கத்தில் இருந்தன.[1] இதுவே இணையதளம் தொடங்கிய முதல் பிரஞ்சு நாளிதழாகும்.

40 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நாளிதழ் நவம்பர் 14, 2013 இல், முதல் முறையாக புகைப்படங்களே இல்லாமல் தனது பதிப்பை வெளியிட்டது. புகைப்படங்கள் ஒரு நாளிதழுக்கு எந்த அளவு முதன்மையானவை என்று உணர்த்துவதற்காகவே இந்த மரபு மீறிய செயலை மேற்கொண்டுள்ளதாக, முகப்புப் பக்கத்திலேயே விளக்கமும் அளித்திருந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. OJD பரணிடப்பட்டது 2009-09-08 at the வந்தவழி இயந்திரம் (Office de justification de la diffusion', French NGO responsible for surveying newspaper circulation).
  2. -photography/news/2307127/french-newspaper-removes-all-images-in-support-of-photographers "French newspaper removes all images in support of photographers". பார்க்கப்பட்ட நாள் 25 November 2013. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிபரேஷன்_(நாளிதழ்)&oldid=3362026" இலிருந்து மீள்விக்கப்பட்டது