லினெக்ஸ் (விண்மீன் கூட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Lynx
லிங்க்சு
விண்மீன் கூட்டம்
Lynx
லிங்க்சு இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்Lyn
Genitiveலினெக்ஸ்
ஒலிப்பு/ˈlɪŋks/,
genitive /ˈlɪns[invalid input: 'ɨ']s/
அடையாளக் குறியீடுthe Lynx
வல எழுச்சி கோணம்8 h
நடுவரை விலக்கம்+45°
கால்வட்டம்NQ2
பரப்பளவு545 sq. deg. (28th)
முக்கிய விண்மீன்கள்4
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
42
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்5
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்0
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்1
ஒளிமிகுந்த விண்மீன்α Lyn (3.14m)
மிக அருகிலுள்ள விண்மீண்LHS 1963
(26.62 ly, 8.16 pc)
Messier objects0
எரிகல் பொழிவு?????
?????
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
அர்சா மேஜர்
Camelopardalis
ஔரிகா விண்மீன் கூட்டம்
ஜெமினி விண்மீன் கூட்டம்
Cancer
Leo (corner)
Leo Minor
Visible at latitudes between +90° and −55°.
March மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.
லினெக்ஸ்

லினெக்ஸ் (Lynx) என்பது ஒரு விண்மீன் கூட்டமாகும். இது வடக்குப் பக்க வானத்தில் அர்சா மேஜருக்கும், ஔரிகாவிற்கும் இடையில் அமைந்துள்ளது தோற்றத்தில் ஜெமினியை விட அதிக அளவு பரப்புக் கொண்டிருந்தாலும் வெறும் கணகளுக்குப் புலப்பட்டுத் தெரிவதில்லை. இதில் 60 விண்மீன்கள் இருப்பதை அறிந்துள்ளனர்.

கண்டுபிடிப்பு[தொகு]

போலந்து நாட்டு வானவியலாரான ஜோகன்ஸ் ஹெவிலியஸ் இந்த புதிய வட்டார விண்மீன் கூட்டத்தை 17 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். லின்க்ஸ் என்பது ஒரு வகையான காட்டுப் பூனையாகும்.இது கூர்மையாகப் பார்க்கும் இயல்புடையது. லினெக்ஸ் போன்று கூர்மையான கண்பார்வை உள்ளவர்களால் மட்டுமே இவ்வட்டாரத்தை இனமறியமுடியுமென்பதால் இதற்கு லினக்ஸ் என்று பெயரிட்டதாக ஹெவிலியஸ் கூறுவார்.

தோற்றம்[தொகு]

இக்கூட்டத்தில் உள்ள ஆல்பா லின்சிஸ் என்ற விண்மீன் ஆரஞ்சு நிறமும் 3.2 தோற்ற ஒளிப்பொலிவெண்ணும் கொண்டு அர்சா மேஜரின் கற்பனைக் கரடி உருவத்தின் நீட்சி பெற்ற முன்னங் காலிற்கு அருகாமையில் 165 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

விண்மீன்கள்[தொகு]

12 லின்சிஸ் என்பது ஒரு பல் விண்மீனாகும். தொலை நோக்கி இதைப் பகுத்து தோற்ற ஒளிப்பொலிவெண் 4.9 மற்றும் 7.3 கொண்ட இரட்டை விண்மீனாகக் காட்டியுள்ளது.

பகுதிறன் மிக்க தொலை நோக்கி இதிலுள்ள பிரகாசமான விண்மீன் ஒளிப்பொலிவெண் 6 உடைய ஒரு துணை விண்மீனுடன் 700 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன் சுற்றி வருகிறது என்பதைத் தெரியப்படுத்தியுள்ளது.

19 லின்சிஸ் ஒரு மும்மீனாகும். இதில் ஒளிப்பொலிவெண் 5.8 உடைய ஒரு விண்மீனும் 6.9 கொண்டு ஓரளவு நெருக்கமாக உடைய ஓரு விண்மீனும் இவற்றிலும் நெடுந்தொலைவு விலகி ஒளிப்பொலிவெண் 8 கொண்ட ஒரு விண்மீனும் இதில் சுற்றி வருகின்றதன.

38 லின்சிஸ்சும் ஒரு நெருக்கமான இரட்டை விண்மீன். இதன் ஒளிப்பொலிவெண் 3.9 மற்றும் 6.3 ஆக உள்ளது. மேலும் இதில் NGC 2419 என்று பதிவு செய்யப்பட்ட ஒரு கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் ஏறக்குறைய 3,00,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருபதாகக் கண்டுபிடித்துள்ளனர்.[1] இது மெக்லானிக் மேகத்தை விடக் கூடுதலான தொலைவில் இருப்பதால் மிக நுண்ணியதாகவும் ஒளிப்பொலிவெண் 10 கொண்டதாகவும் தெரிகிறது.

மேற்கோள்[தொகு]

  1. Levy 2005, ப. 168-169.

வெளியிணைப்புகள்[தொகு]