லிந்தமுல்லை பத்தினிக் கோயில்
| லிந்தமுல்லை பத்தினிக் கோயில் Lindamulla Pattini Devalaya ළිඳමුල්ල පත්තිනි දේවාලය | |
|---|---|
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | இலங்கை, பதுளை |
| புவியியல் ஆள்கூறுகள் | 06°58′47.6″N 81°04′10.7″E / 6.979889°N 81.069639°E |
| சமயம் | பௌத்தம் |
| மாகாணம் | ஊவா மாகாணம் |
| மாவட்டம் | பதுளை |
| பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | 8 சூலை 2005[1] |
லிந்தமுல்லை பத்தினிக் கோயில் (Lindamulla Pattini Devalaya, சிங்களம்: ළිඳමුල්ල පත්තිනි දේවාලය) என்பது இலங்கையின் பதுளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு பழங்கால கோயில் ஆகும். இது தெமோதரை - ஓடைப் பள்ளத்தாக்கு - பதுளை பிரதான சாலையில், முத்தியங்கனா ராஜ மகா விகாரையிலிருந்து சுமார் 1.5 km (0.93 mi) தொலைவில் உள்ளது. இக்கோயிலானது பிள்ளைப்பேறு மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும் தெய்வம் என்று நம்பப்படும் சிங்கள தெய்வமான பத்தினிக்கு (கண்ணகி கட்டபட்டுள்ளது.[2] இக்கோயிலானது தொல்லியல் சிறப்புமிக்க பாதுகாக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாக அரசாங்கத்தால் முறையாக 8 சூலை 2005 அன்று அரசாங்க வர்த்தமானி எண் 1401 இன் வழியாக அறிவிக்கபட்டுள்ளது. [3]
கோயில்
[தொகு]இந்த கோவிலில் வளாகத்தில் மாலிகவா (கருவறை), சமையலறை, போதி மரத்துடன் புத்தர் சன்னதி ஆகியவை உள்ளன. இருப்பினும் கருவறைக்கு முன்னால் சிங்காசன மண்டிராயா (அரியாசன அறை) இல்லை. சன்னதியின் வெளிப்புறச் சுவரானது பல்வேறு பழங்கால ஓவியங்களால் அழகூட்டபட்டுள்ளது.
மேலும் காண்க
[தொகு]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Protected Monument List 2012-12-12" (PDF). தொல்பொருளியல் திணைக்களம், இலங்கை. 12 December 2012. Archived from the original (PDF) on 2018-11-23. Retrieved 27 June 2017.
- ↑ "லிந்தமுல்லை பத்தினிக் கோயில் (பதுளை)". இலங்கை பிரதீபா. 30 டிசம்பர் 2018.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ "Gazette". இலங்கை அரச வர்த்தமானி 1401. 8 July 2005.