உள்ளடக்கத்துக்குச் செல்

லிடியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகாமனிசியப் பேரரசர் சைரசின் கல்லறையில் லிடியா வீரனின் சிற்பம்[1], கிமு 480
லிடியாவில் கிரேக்க குடியிருப்புகள், ஆண்டு கிபி 50

லிடியா மக்கள், அனதோலியாவின், (தற்கால துருக்கி நாட்டின்) மேற்கு பிரதேசமான லிடியாவில் வாழ்ந்த மக்கள் ஆவார். இம்மக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழியான அனதோலிய மொழிக் குடும்பத்தின் லிடியா மொழியைப் பேசினர். வரலாற்றாளர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்களின் கூற்றுப்படி, இம்மக்கள் கிமு 2000 முதல் அனதோலியா பகுதிகளில் தொடர்ந்து வாழ்ந்தனர். [2]தனித்துவமான லிடியப் பண்பாடு, தென்மேற்கு அனதோலியாவில் கிமு முதல் நூற்றாண்டு வரை நீடித்தது. லிடியர்களின் தலைநகரம் சாடிஸ் நகரம் ஆகும். [3]இது அனதோலியாவிற்கும், கிரேக்கத்திற்கும் இடையே இருட்ந்தது. லிடியர்களின் ஆட்சி கிமு 7 ஆம் நூற்றாண்டு முதல் கிமு 6ஆம் நூற்றாண்டு வரை மிகவும் செழித்திருந்த போது, லிடியாவிற்கு வடகிழக்கில் இருந்த ஃபிரிஜியா[4]பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர். லிடியர்களின் நாட்டிற்கு கிழக்கில் மீடியாப் பேரரசு இருந்தது.

கிமு 546ல் பாரசீக அகாமனிசியப் பேரரசர் சைரசுவின் படைகளுடன் எக்லிப்ஸ் போரில்[5]லிடியப் படைகள் வீழ்ச்சி கண்டதால், அத்துடன் லிடியர்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது.

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Darius I, DNa inscription, Line 28
  2. Ivo Hajnal. "Lydian: Late Hittite or Neo-Luwian?" (PDF). Institut für Sprachen und Literaturen, Universität Innsbruck.; M. Giorgieri; M. Salvini; M.C. Tremouille; P. Vannicelli (1999). Licia e Lidia prima dell'Ellenizzazione. Consiglio Nazionale delle Ricerche, Rome.
  3. Sardis
  4. [1]
  5. Battle of the Eclipse
  6. Apadana
  7. Mount Tmolus

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிடியர்கள்&oldid=4154472" இலிருந்து மீள்விக்கப்பட்டது