லிடா ஹேமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிடா ஹேமன்
1900 இல் லிடா ஹேமன்
பிறப்புலிடா குஸ்டாவா ஹேமன்
மார்ச்சு 15, 1868(1868-03-15)
ஆம்பர்கு, வடக்கு ஜெர்மன் கூட்டமைப்பு
இறப்பு13 சூலை 1943(1943-07-13) (அகவை 75)
சூரிக்கு, சுவிட்சர்லாந்து
தேசியம்ஜெர்மானியார்

லிடா குஸ்டாவா ஹேமன் (Lida Gustava Heymann) (15 மார்ச் 1868 – 31 ஜூலை 1943) ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணியவாதியும், அமைதிவாதியும், பெண்கள் உரிமை ஆர்வலரும் ஆவார்.

தனது கூட்டாளியான அனிடா ஆக்ஸ்பர்க்குடன் சேர்ந்து முதலாளித்துவ பெண்கள் இயக்கத்தின் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக இருந்தார். "பெண்கள் குழுக்களின் சங்கத்திலும்" முன்னணி நபராக இருந்தார்.

இவர் ஜெர்மனியில் பால்வினைத் தொழில் ஒழிப்பு இயக்கத்தை இணைந்து நிறுவினார்.[a] பாலியல் தொழிலாளிகளை மோசமாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இவர் சட்டத்துடன் முரண்பட்டார். மேலும் அவர்களுக்கான மாநில ஒழுங்குமுறைகளை ரத்து செய்ய அழைப்பு விடுத்தார். ஹேமன் "ஆண் ஆதிக்கத்திலிருந்து பெண்கள் தங்களை விடுவித்துக் கொள்ள உதவ" விரும்பினார். அதற்காக ஒரு மகளிர் மையத்தை நிறுவி உணவு, குழந்தை வளர்ப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். ஒரு இணை கல்வி உயர்நிலைப் பள்ளி மற்றும் பெண் எழுத்தர்கள் மற்றும் நாடகப் பணியாளர்களுக்கான தொழில்முறை சங்கங்களையும் நிறுவினார்.

1902 இல் இவர் கூட்டாக (அனிடா ஆக்ஸ்பர்க் உடன்) முதல் ஜெர்மன் பெண்கள் வாக்குரிமைக்கான சமூகத்தை நிறுவினார். ஆக்ஸ்பர்க்குடன் சேர்ந்து, இவர் 1919 முதல் 1933 வரை ஃப்ராவ் இம் ஸ்டாட் ("மாநிலத்தில் பெண்கள்") என்ற செய்தித்தாளை வெளியிட்டார். இந்த செய்தித்தாள் பல்வேறு விஷயங்களில் அமைதி, பெண்ணிய மற்றும் ஜனநாயக நிலைப்பாடுகளை முன்வைத்தது.

1923 இல் இவர்கள் இருவரும் ஆஸ்திரிய இட்லரை ஜெர்மனியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். 1933 இல் இட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, இருவரும் நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் குடியேறினர். பின்னர் நாடு திரும்பவில்லை. இவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது ஹேமன் 1943 இல் இறந்தார். பிளண்டர்ன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

குறிப்பு[தொகு]

  1. ஜெர்மன் அரசு அந்த நேரத்தில் பால்வினைத் தொழிலை அனுமதித்தது. மேலும் ஒழுங்குபடுத்தியது..

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிடா_ஹேமன்&oldid=3664657" இருந்து மீள்விக்கப்பட்டது