லிசெமைசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிசெமைசு
புதைப்படிவ காலம்:Miocene to recent, 15.97–0 Ma
லிசெமைசு பங்க்டேட்டா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: ஊர்வன
வரிசை: டெசுடுனிசு
குடும்பம்: டிரையோனிங்கிடே
பேரினம்: லிசெமைசு
எம். ஏ. சுமித் 1931[1][2]
வேறு பெயர்கள் [2]

லிசெமைசு (Lissemys) என்பது மெல்லிய ஓட்டினை கொண்ட ஆமைகள் உள்ள பேரினம் ஆகும். இவை டிரையோனோர்பினே குடும்பத்தில் சைக்லானோபிரினே துணைக் குடும்பத்தினைச் சார்ந்தது. இந்த பேரினம் தெற்காசியாவைச் சேர்ந்தது.

சிற்றினங்கள்[தொகு]

லிசெமைசு பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட மூன்று சிற்றினங்கள் உள்ளன.[1]

  • லிசெமைசு செலோனென்சிசு (கிரே, 1856) - இலங்கை மெல்லோடு ஆமை
  • லிசெமைசு பங்க்டேட்டா போனபர்த்தீ, 1789) - இந்திய மெல்லோடு ஆமை
  • லிசெமைசு குட்டேட்டா பீட்டர்சு, 1868) – பர்மிய மெல்லோடு ஆமை

இந்தப் பேரினத்தில் அழிந்துபோன பல புதைபடிவ சிற்றினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. லிசெமைசு பைரமென்சிசு பிரசாத், 1974, இந்தியாவிலுள்ள பிராம் தீவிலிருந்து விவரிக்கப்பட்டது. ஆனால் இவை பெரும்பாலும் துபியா எனக் கருதப்படுகின்றன.[3][4] தற்போதுள்ள இந்திய மெல்லோடு ஆமை (லி. பங்க்டேட்டா) மியோசீன் காலத்திலிருந்தே புதைபடிமங்கள் மூலம் அறியப்படுகிறது.[5]

பின் குறிப்பு: இந்த பேரினம் முதலில் லிசெமைசு அல்லாத பேரினத்தில் விவரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

நூல் பட்டியல்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Smith, M. A. (1931). The Fauna of British India, Including Ceylon and Burma: Reptilia and Amphibia Volume I Loricata, Testudines. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xxviii + 185 pp. + Plates I-II. (Lissemys, new genus, p. 154).
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிசெமைசு&oldid=3352471" இருந்து மீள்விக்கப்பட்டது