உள்ளடக்கத்துக்குச் செல்

லா மலிஞ்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெரினா
1886 இல் செதுக்கப்பட்ட மாலின்ட்சின் உருவப்படம்.
பிறப்புஅண். 1500
மற்ற பெயர்கள்மாலின்ட்சின், லா மலிஞ்சே
பணிஇடைத் தரகர், ஆலோசகர், மொழிபெயர்ப்பாளர்
அறியப்படுவதுRole in the அசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றிய போரில் எர்னான் கோட்டெசுக்கு உதவியது
வாழ்க்கைத்
துணை
ஜூவான் ஜாராமிலோ
பிள்ளைகள்மார்ட்டின் கோர்ட்டெசு
மரியா

மெரினா அல்லது மாலின்ட்சின் ( சுமார் 1500 – 1529), மிகவும் பிரபலமாகலா மலிஞ்சே எனவும் அறியப்படும் இவர், மெக்சிகன் வளைகுடா கடற்கரையைச் சேர்ந்த ஒரு நஹுவா இனப் பெண் ஆவார். எசுப்பானிய தேடல் வெற்றி வீரரான எர்னான் கோட்டெசின் மொழிபெயர்ப்பாளராகவும், ஆலோசகராகவும், இடைத்தரகராகவும் செயல்பட்டு அசுடெக் பேரரசு மீதான எசுப்பானியர்களின் வெற்றிக்கு பங்களித்ததார்.[1] தபாஸ்கோவின் பூர்வீகவாசிகளால் 1519 இல் எசுப்பானியர்களுக்கு வழங்கப்பட்ட 20 அடிமைப் பெண்களில் இவரும் ஒருவர்.[2] கோர்டெஸ் இவரை தனது துணையாகத் தேர்ந்தெடுத்தார். இவர்களுக்கு மார்டின் என்ற ஒரு மகன் பிறந்தார். இவர் புதிய எசுப்பானியாவில் முதல் மெஸ்டிசோக்களில் (கலப்பு ஐரோப்பிய மற்றும் பூர்வீக அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்) ஒருவர்.[3]

லா மலிஞ்சேவின் நற்பெயர் பல நூற்றாண்டுகளாக மாறியுள்ளது. பல்வேறு மக்கள் தங்கள் சொந்த சமூகங்களின் சமூக மற்றும் அரசியல் முன்னோக்குகளுக்கு எதிராக இவரது பங்கை மதிப்பிடுகின்றனர். குறிப்பாக 1821 இல் எசுப்பானியாவில் இருந்து மெக்சிகோ சுதந்திரம் பெற வழிவகுத்த மெக்சிக்கோ விடுதலைப் போருக்குப் பிறகுஇவரை ஒரு தீயவளாகவோ அல்லது சூழ்ச்சிகாரியாகவோ சித்தரித்தன.[4] இன்று மெக்சிகோவில், லா மலிஞ்சே ஒரு சக்திவாய்ந்த சின்னமாக உள்ளார். துரோகத்தின் உருவகம், மிகவும் பாதிக்கப்பட்டவர் அல்லது புதிய மெக்சிகன் மக்களின் அடையாள தாய் என பல்வேறு மற்றும் அடிக்கடி முரண்பட்ட அம்சங்களில் புரிந்து கொள்ளப்படுகிறார். மெக்சிகோவில் மலிஞ்சிஸ்டா என்ற சொல் ஒரு விசுவாசமற்ற தோழரைக் குறிக்கிறது.

வரலாறு

[தொகு]

இவரது பிறந்த தேதி பற்றி தெரியவில்லை.[5]ஆனால் அது சுமார் 1500 ஆக இருக்கலாம். மேலும் 1505க்கு பிற்பட்டதாகவும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. [6][7][a] ஆஸ்டெக் பேரரசின் கிழக்கே கோட்சாகோல்கோஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு மெசோஅமெரிக்கன் மாநிலத்தின் ஒரு பகுதி அல்லது துணை ஆறான அல்டெபெட்டின் கரையில் இவர் பிறந்திருக்கலாம்.[8][9] அதே போல இவரது பிறப்பு பெயரைப் பற்றிய தகவல்களும் மாறுபடுகின்றன.[10][11][12]

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
 1. Karttunen (1994) gives "ca. 1500" for her birth year,[7] while Townsend (2006) writes that she was born before Charles V (who was born in February 1500) turned five.[6]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Hanson, Victor Davis (2007-12-18). Carnage and Culture: Landmark Battles in the Rise to Western Power (in ஆங்கிலம்). Knopf Doubleday Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-42518-8.
 2. Thomas (1993), ப. 171–172.
 3. Cypess (1991), ப. 7.
 4. Cypess (1991), ப. 12-13.
 5. Cypess (1991), ப. 33.
 6. 6.0 6.1 Townsend (2006), ப. 11.
 7. 7.0 7.1 Karttunen (1994), ப. 1.
 8. Evans (2004), ப. 522.
 9. Townsend (2006), ப. 14.
 10. Townsend (2006), ப. 12.
 11. Karttunen (2001), ப. 352.
 12. Restall (2018), ப. xiii.

நூல் பட்டியல்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
La Malinche
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லா_மலிஞ்சே&oldid=3938999" இலிருந்து மீள்விக்கப்பட்டது