லா குளோய்ரே
லா குளோய்ரே முதலாவது இரும்புத்தகடு போர்த்திய போர்க்கப்பல்.
| |
கப்பல் (பிரான்ஸ்) | |
---|---|
பெயர்: | லா குளோய்ரே |
நினைவாகப் பெயரிடப்பட்டது: | குளோரி |
கட்டியோர்: | தூலோன் (Toulon), பிரான்ஸ் |
துவக்கம்: | ஏப்ரல் 1858 |
வெளியீடு: | 24 நவம்பர் 1859 |
பணியமர்த்தம்: | ஆகஸ்ட் 1860 |
பணி நிறுத்தம்: | 1879 |
விதி: | 1883 இல் உடைக்கப்பட்டது |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | armoured frigate |
பெயர்வு: | 5,630 தொன்கள் |
நீளம்: | 77.8 மீ |
வளை: | 17 மீ |
Draught: | 8.4 மீ |
உந்தல்: | Sail (1100 மீ) single shaft HRCR (horizontal return), 2,500 குதிரைவலு (1.9MW) நீராவி எந்திரம், 8 oval boilers |
விரைவு: | 13 நாட்டுகள் |
தாங்குதிறன்: | 665 தொன்கள் நிலக்கரி |
பணிக்குழு: | 570 ஆட்கள் |
போர்க்கருவிகள்: | 36 × 163 மிமீ rifled muzzle-loaders மாதிரி (1858/60) 1866 க்குப் பின் 6 × 193 மிமீ BL மாதிரி 1866 |
கவசம்: | 110 - 119 மிமீ இரும்புத் தகடுகள் |
பிரான்ஸ் கடற்படையின் லா குளோய்ரே உலகின் முதலாவது இரும்புத்தகடு போர்த்திய போர்க்கப்பல் ஆகும். இது கிரீமியன் போரைத் தொடர்ந்து, சுடுகலன்கள் தொடர்பிலான புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. விழுந்து வெடிக்கும் எறிகணைகளைப் பயன்படுத்திய பைக்ஸ்ஹான்ஸ் மற்றும் சுழல் துப்பாக்கிகள் (Rifles) மரக் கப்பல்களுக்குப் பலத்த சேதத்தை உண்டாக்கின. இக் கப்பல் பிரான்சின் கப்பல் வடிவமைப்புக்கலை வல்லுனரான டூப்பூய் டி லோமே (Dupuy de Lôme) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
இக் கப்பலில் பாரிய இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. இத் தகடுகள் மரத்தாலான சட்டகங்களின் மீது பொருத்தப்பட்டன. 12 மிமீ தடிப்புக் கொண்ட இதன் காப்புத் தகடுகள் அக்காலத்தில் இருந்த, பிரான்ஸின் 50 இறாத்தல் மற்றும் பிரித்தானியாவின் 68 இறாத்தல் குண்டுகளை ஏவக்கூடிய மிகவும் வலுவான சுடுகலன்களைக் கொண்டு 20 மீட்டர் தொலைவில் இருந்து முழு வலுவுடன் நடத்தப்பட்ட சோதனைத் தாக்கத்தைத் தாக்குப் பிடித்தன.
இத்தகைய சிறப்பான இயல்புகள் இருந்தபோதும், பணியாளர்களுக்கு இது பெரிதும் வசதிக்குறைவாகவே இருந்தது. பாதுகாப்புக் கருதி காப்புத் தகடுகளில் துளைகள் எதுவும் இடமுடியாததால், காற்றோட்டம், வெளிச்சம் என்பன உள்ளே மிகக் குறைவாகவே இருந்தன. வெளிச்சத்துக்காக எண்ணெய் விளக்குகளையே பயன்படுத்த வேண்டியிருந்தது.
லா குளோய்ரேயின் அறிமுகம் பழைய மரப் போர்க்கப்பல்கள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்படுவதற்கு ஏதுவாகியது. முக்கியமான கடற்படைகள் அனைத்தும் வேறு வழியின்றி இரும்பு போர்த்திய கப்பல்களைக் கட்டின. அக்காலத்தில் பழைய மரக்கப்பல்களுடன் லா குளோரே நடத்திய போர்கள், செம்மறியாடுகளுக்கு நடுவே ஓநாய் நடத்திய தாக்குதலுக்கு ஒப்பிடப்பட்டது.