லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம்
![]() | |
ஓவியர் | யோர்ச்-பியர் சோரா |
---|---|
ஆண்டு | 1884–1886 |
வகை | கன்வசில் எண்ணெய் வண்ணம் |
விடயம் | பாரிசிலுள்ள லா கிரான்டே ஜாட் தீவில் மக்கள் ஓய்வெடுக்கின்றனர். |
பரிமாணம் | 207.6 cm × 308 cm (81.7 in × 121.25 in) |
இடம் | சிக்காகோ கலை நிறுவனம்[1] |
லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் (பிரெஞ்சு: Un dimanche après-midi à l'Île de la Grande Jatte) என்பது, யோர்ச் சோரா என்னும் பிரான்சிய ஓவியரால் வரையப்பட்ட ஒரு புகழ் பெற்ற ஓவியம். இது புள்ளியியம் (pointillism) என்னும் ஓவியப் பாணியின் எடுத்துக்காட்டும் ஆகும்.
பின்னணி[தொகு]
1879ல் யோர்ச் சோரா பிரெஞ்சுப் படையில் ஒரு படைவீரராக இணைந்தார். 1880ல் அங்கிருந்து திரும்பிவிட்டார். பின்னர் பாரிசில் ஒரு சிறிய ஓவிய வேலைத்தலம் ஒன்றைத் தொடங்கினார். 1883ல் தனது ஆக்கங்களை முதன் முதலாக மக்கள் பார்வைக்கு வைத்தார். அடுத்த ஆண்டு லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் என்னும் ஓவியத்தை வரையத் தொடங்கினார். 1886ல், உணர்வுப்பதிவுவாதிகளுடன் சேர்ந்து இந்த ஓவியமும் காட்சிக்கு வைக்கப்பட்டது.[2] இந்த ஓவியத்துடன், சோரா, உணர்வுப்பதிவுவாதத்தின் புதிய வடிவமான புது-உணர்வுப்பதிவுவாதத்தின் முன்னோடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Roch, Christine L. "From "Rube Town" to Modern Metropolis:". 2012-10-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Janis Tomlinson, ed., Readings in Nineteenth-Century Art, 1996
- ↑ Petra ten-Doesschate Chu, Nineteenth-Century European Art, 2012 (3rd Edition)