உள்ளடக்கத்துக்குச் செல்

லாஸ்லியா மரியனேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லொஸ்லியா மரியநேசன்
பிறப்பு23 மார்ச்சு 1996 (1996-03-23) (அகவை 28)
கிளிநொச்சி, இலங்கை
தேசியம்இலங்கை தமிழர்
பணிசெய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சிக் கலைஞர், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2015 - இன்று வரை
சொந்த ஊர்திருகோணமலை

லொஸ்லியா மரியநேசன் (பிறப்பு: 23 மார்ச்சு 1996) என்பவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபற்றினார்.[1][2][3] இவர் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப் 2021 செப்டம்பர் 17 இல் வெளியானது.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

லாஸ்லியா இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் திருக்கோணமலைக்கு இடம்பெயர்ந்தனர். இவர் தன் கல்வியை திருக்கோணமலையில்  தொடர்ந்தார். இவர் நான்கு ஆண்டுகளாக கொழும்பில் வசித்து வந்தார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.[4]

2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப்[5] என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படம் 2021 செப்டம்பர் 17 இல் திரையரங்குகளில் வெளியானது. இவர் 'ப்ளேஸ்ஸோ' என்ற சோப்பு விளம்பரங்களில் நடித்துள்ளார்.[6][7]

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் அலைவரிசை குறிப்புகள்
2015 - 2018 குட் மோர்னிங் ஸ்ரீ லங்கா தொகுப்பாளர் சக்தி தொலைக்காட்சி
2016 பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஒரு அத்தியாயம் மட்டும்
2018 - 2019 நியூஸ் பேஸ்ட் செய்தி வாசிப்பாளர்
2019 பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் விஜய் தொலைக்காட்சி
2020 ஸ்டார்ட் மியூசிக் 2 விருந்தினராக ஒரு அத்தியாயம் மட்டும்

திரைப்படம்

[தொகு]
ஆண்டு படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2021 பிரண்ட்ஷிப் அனிதா
2022 கூகுள் குட்டப்பா தரணி

மேற்கோள்கள்

[தொகு]
  1. லாஸ்லியா - பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இலங்கை பெண்
  2. Admin (2019-06-24). "Losliya Bigg Boss, Biography, Wiki, DOB, Family, Profile, Movies list" (in அமெரிக்க ஆங்கிலம்).
  3. "Losliya Mariyanesan (@losliyamariya96) • Instagram photos and videos" (in ஆங்கிலம்).
  4. admin (2019-06-23). "Losliya (Bigg Boss) Wiki, Biography, Age, Family, Native, Images" (in ஆங்கிலம்). Archived from the original on 2019-06-26. பார்க்கப்பட்ட நாள் 2019-07-01.
  5. "Cricketer Harbhajan Singh to Make Acting Debut with Tamil Film Friendship, See Poster". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-08-01.
  6. "விளம்பரங்களிலும் கல்லா கட்டும் லாஸ்லியா". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  7. "முதல் முறையாக விளம்பரத்தில் நடித்த லாஸ்லியா". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாஸ்லியா_மரியனேசன்&oldid=4030245" இலிருந்து மீள்விக்கப்பட்டது