லாவ் இயூ
லாவ் இயூ (மலாய்; ஆங்கிலம்: Lau Yew; பின்யின்: Liú Yáo; சீன மொழி: 劉堯); (1915–1948) என்பவர் மலாயா பொதுவுடைமை கட்சியில் (Communist Party of Malaya) முதன்மைப் பொறுப்பு வகித்தவர்; மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் (Malayan People's Anti-Japanese Army) (MPAJA) மத்திய இராணுவக் குழுவில் தலைமைப் பொறுப்பு வகித்தவர் ஆவார்.
இவரின் அசல் பெயர் லியூ சாங் பியாவோ (Liu Chang-biao).[1][2](பக்.109)
வாழ்க்கை வரலாறு
[தொகு]இவர் 1915-ஆம் ஆண்டு, சீனா, ஆய்னான் தீவில் பிறந்தார். 1931-ஆம் ஆண்டு, தன்னுடைய 16-ஆவது வயதில் சீனப் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார்.[1][3] 1936-ஆம் ஆண்டு சீன அரசாங்க தேசியவாத காவல்துறையிலிருந்து சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார். பின்னர் ஓர் ஆன்டு கழித்து சூலை 1937-இல் சிங்கப்பூரில் இயங்கிய எதிரி எதிர்ப்பு ஆதரவு சங்கத்தில் (Anti-Enemy Backing-Up Society) சேர்ந்தார்.[3]
பெப்ரவரி 1940-இல் மலாயா பொதுவுடைமை கட்சியில் உறுப்பினரான இவர், திசம்பர் 1941-இல் பிரித்தானிய உளவு அமைப்பு 136 (Force 136) எனும் சிறப்பு உளவுப் பயிற்சிப் பள்ளியில் (101 Special Training School) சிறப்புப் பயிற்சி பெற்றார்.[3] இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் முன்னாள் படைவீரர் தோழர்கள் சங்கத்தின் (MPAJA Ex-Service Comrades Association) துணைத் தலைவர்; மற்றும் தலைவர் பதவிகளை வகித்தார். 1948-இல் அவர் இறக்கும் வரையில் (Death of Lau Yew) அந்தப் பதவிகளை வகித்தார்.[3][4]
அதிகார மாற்றம்
[தொகு]1945-ஆம் ஆண்டு பிரித்தானியர்களிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற லாவ் இயூ திட்டமிட்டதாக நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் பிரித்தானியர்கள் தங்களின் அதிகாரத்தை மலாயாவில் மீண்டும் முழுமையாக நிலைநிறுத்தவில்லை. லாவ் இயூவின் அதிகாரக் கைப்பற்றல் திட்டத்திற்கு, அப்போதைய மலாயா பொதுவுடைமை கட்சியின் தலைவர் இலாய் தெக் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன் பின்னர், சூலை 16, 1948 அன்று, காஜாங் காட்டுப் பகுதியில் பிரித்தானிய அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதலில் லாவ் இயூ கொல்லப்பட்டார்.[4][5]
மேலும் காண்க
[தொகு]- மலாயா அவசரகாலம்
- மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம்
- மலாயா தேசிய விடுதலை இராணுவம்
- மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Hack, Karl (2021-12-16). The Malayan Emergency: Revolution and Counterinsurgency at the End of Empire (in ஆங்கிலம்). Cambridge University Press. ISBN 978-1-009-23414-6.
- ↑ Chin, C. C.; Hack, Karl (2004). Dialogues with Chin Peng: New Light on the Malayan Communist Party (in ஆங்கிலம்). NUS Press. p. 113. ISBN 978-9971-69-287-2.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Akashi, Yōji; Yoshimura, Mako (2008-12-01). New Perspectives on the Japanese Occupation in Malaya and Singapore, 1941-1945 (in ஆங்கிலம்). NUS Press. p. 92. ISBN 978-9971-69-299-5.
- ↑ 4.0 4.1 "Rebels' H.Q. Raided in Malaya.". The Sydney Morning Herald: p. 1. 17 July 1948. https://nla.gov.au/nla.news-article18078154. பார்த்த நாள்: 17 November 2013.
- ↑ Jackson, Robert (2011-05-18). The Malayan Emergency & Indonesian Confrontation: The Commonwealth's Wars, 1948–1966 (in ஆங்கிலம்). Pen and Sword. ISBN 978-1-4738-1613-8.
நூல்கள்
[தொகு]- O'Ballance, Edgar (1966). Malaya: The Communist Insurgent War, 1948–1960. Hamden, Connecticut: Archon Books.