லாவண்யா (திரைப்படம்)
| லாவண்யா | |
|---|---|
| இயக்கம் | ஜி. ஆர். லட்சுமணன் |
| தயாரிப்பு | ஜி. ஆர். லட்சுமணன் ஈஸ்டர் ஆர்ட் புரொடக்சன்ஸ் |
| கதை | கதை ஜி. ஆர். லட்சுமணன் |
| இசை | எஸ். வி. வெங்கட்ராமன் |
| நடிப்பு | டி. ஈ. வரதன் புளிமூட்டை ராமசாமி சூர்யபிரபா குமாரி கமலா டி. எஸ். ஜெயா வனஜா |
| வெளியீடு | மே 26, 1951 |
| ஓட்டம் | . |
| நீளம் | 15623 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
லாவண்யா (Lavanya) என்பது 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜி. ஆர். லக்ஸ்மணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஈ. வரதன், புளிமூட்டை ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இப்படம் 1951 மே 26 அன்று வெளியானது.[1]
கதை
[தொகு]ஏழைப் பெண்களான இருவர் (குமாரி கமலா, வனஜா) தெருக்களில் நடனமாடி தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். தேவதைகள் சிலர் பூமிக்கு இறங்கி வேடிக்கை பார்க்க வருகின்றனர். அவர்கள் ஒரு பெண்ணை (கமலா) குளிக்கும் போது தொலைந்து போகச் செய்து, மற்றொரு பெண்ணை (வனஜா) அழகான இளைஞனாக (வரதன்) மாற்றுகிறார்கள். அந்த இளைஞன் ஒரு இளவரசியின் (சூரியபிரபா) மீது காதல் கொள்கிறான். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர்.
இதற்கிடையில் இளைஞனுக்கு முன் தோன்றும் ஒருவர் ஒரு மாய மோதிரத்தைப் பரிசளிக்கிறார். இந்த மோதிரம் நீ விரும்பும் அனைத்தையும் நிறைவேற்றும், ஆனால் ஒரு நிபந்தனை திருமணம் செய்தால், அனைத்தும் மாயமாகிவிடும் என்கிறார். அதன்படியே இளைஞன் நடக்கிறான். இளவரசியை சந்திக்காமல் தவிர்க்கிறான். அதனால் அந்த இளைஞன் தான் விரும்பிய அனைத்தையும் பெறுகிறான். கடைசியில், ஒரு நாள் அவன் அவளுடைய வசீகரத்திற்கு சரண்டைகிறான். இதனால் மாய மோதிரம் மறைந்துவிடுகிறது. அவனிம் இருந்த அனைத்தும் மறைகிறது. இழந்த அனைத்தையும் திரும்பப் பெற அவன் மீண்டும் போராடுகிறான். இழந்த காதலியை எப்படி திரும்பப் பெறுகிறான் என்பதே கதையின் மீதியாகும்.[3]
நடிப்பு
[தொகு]பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுத்தளத்திலிருந்தும்[1], தி இந்து இதழின் விமர்ச்சனக் கட்டுரையின் தகவல்களைக் கொண்டு உருவாக்கபட்ட பட்டியல்.[3]
- இளைஞனாக ஈ. டி. வரதன்
- லாவண்யாவாக சூரியப்பிரபா
- இளைஞனாக மாறிய ஏழைப் பெண்ணாக வனஜா
- குளிக்கும்போது காணாமல் போன பெண்ணாக குமாரி கமலா
- புளிமூட்டை ராமசாமி
- டி. எஸ். ஜெயா
- சி. ஆர். ராஜகுமாரி
தயாரிப்பு
[தொகு]இப்படத்தை ஜி. ஆர்.லட்சுமணன் தயாரித்து கதை, வசனம் எழுதி இயக்கினார். மார்கஸ் பார்ட்லி மற்றும் ஆதி இரானி ஒளிப்பதிவு செய்தனர், ஜம்பு மற்றும் ஏ. எஸ். தங்கவேலு படத்தொகுப்பு செய்தர். கே. நாகேஸ்வர ராவ் கலை இயக்குநராக இருந்தார். கே. என். தண்டாயுதபாணி பிள்ளை, வழுவூர் பி. இராமையா பிள்ளைவழுவூர் பி. ராமையா பிள்ளை, ஹீராலால் ஆகியோர் நடனத்தை அமைத்தனர். படத்தின் படப்பிடிப்பு விஜயா வாகினி ஸ்டுடியோவில் நடந்தது.[3]
பாடல்கள்
[தொகு]இப்படத்திற்கு எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்தார். பாடல் வரிகளை பாபநாசம் சிவன்எழுதினார்.[4]
| பாடல் | பாடகர்/கள் |
|---|---|
| "எண்ணி எண்ணி என் மனது" | |
| "தங்க ஒரு நிழலில்லையே...பாரத நன்னாடு" | டி. கே. பட்டம்மாள் |
| "காலம் கெட்டுப் போச்சே" | ஜிக்கி |
| "இது முன் செய்த வினையோ" | பி. ஏ. பெரியநாயகி |
| "ஏழை என்னிடம் உமது மனமும்" | |
| "தூது நீ செல்லாயோ முகிலே" | |
| "உனை நினைந்துருகி கனவிலும்" |
வரவேற்பு
[தொகு]இந்தப் படம் வணிக ரீதியாக நல்ல வசூலைப் பெறவில்லை. இருப்பினும், ராண்டார் கையின் கூற்றுப்படி, இது நடனக் காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவுக்காக நினைவு கூரப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "1951 – லாவண்யா – ஈஸ்டர்ன் ஆர்ட் புரொடக்" [1951 – Lavanya – Eastern Art Produc.]. Lakshman Sruthi. Archived from the original on 22 September 2017. Retrieved 1 September 2024.
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். p. 28-58.
{{cite book}}: Text "[" ignored (help) - ↑ 3.0 3.1 3.2 3.3 Randor Guy (5 February 2011). "Lavanya 1951". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170605005010/http://www.thehindu.com/features/cinema/Lavanya-1951/article15129049.ece.
- ↑ Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam — Part 1 (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 25.