உள்ளடக்கத்துக்குச் செல்

லாவண்யா தற்கொலை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாவண்யா
Lavanya
பிறப்புலாவண்யா
(2005-11-06)நவம்பர் 6, 2005
இறப்பு19 சனவரி 2022 (17 வயது)
தஞ்சாவூர், தமிழ்நாடு
இறப்பிற்கான
காரணம்
தற்கொலை முறைகள்
தேசியம்இந்தியர்
பணிமாணவி

லாவண்யா தற்கொலை வழக்கு (Lavanya suicide case) இந்தியாவின் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தூய நெஞ்ச பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 17 வயது மாணவி லாவண்யா தனது பள்ளி ஊழியர்களின் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தொடுக்கப்பட்ட வழக்காகும். திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள இப்பள்ளியில் லாவண்யா 8-ஆம் வகுப்பு முதல் படித்து வந்துள்ளார். பள்ளிக்கூட நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்தியது லாவண்யாவின் தற்கொலைக்கான காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது.[1][2]

வழக்கின் வரலாறு

[தொகு]

ஜனவரி 9, 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 9 ஆம் தேதியன்று லாவண்யா பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவு அடைந்த லாவண்யா இறப்பதற்கு முன் ஒரு வாக்குமூலம் அளித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பள்ளி அதிகாரிகள் தன்னையும் பெற்றோரையும் கிறித்துவ மதத்திற்கு மாறச் சொன்னார்கள். நாங்கள் மறுத்துவிடவே என்னை குறிவைத்து சித்திரவதை செய்தார்கள். விடுதி அறைகளை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். தொடர்ந்து என்னை திட்டினார்கள். ஒருவேளை நான் மதம் மாற மறுத்ததன் காரணமாக இருக்கலாம் என்று அக்காணொலி வாக்குமூலம் குறிப்பிடுகிறது. 19 சனவரி 2022 அன்று லாவண்யா இறந்தார். விடுதி காப்பாளர் சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 இன் கீழ் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.[3] கானொளி வீடியோவை பதிவு செய்ததற்காக அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.[4]

மதமாற்ற விவகாரம் குறித்து சிறுமியோ அல்லது அவரது குடும்பத்தினரோ காவல் துறையிடம் எந்த புகாரும் பதிவு செய்யவில்லை என்று காவல்துறை முதலில் கூறியது. தங்கள் மகள் மதம் மாறுவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறிய புகார்களை காவல்துறை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று லாவண்யாவின் பெற்றோர்கள் தெரிவித்தனர். மாநில காவல்துறை விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிய லாவண்யாவின் பெற்றோர் சனவரி 21 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையைக் கோரினர்.[5]

சனவரி 31 அன்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மேலும் விசாரணைக்காக மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற உத்ததரவிட்டது.[6][5] [7]

விசாரணையை சிதைக்கவே காவல்துறை முயற்சி செய்கிறது என்றும் லாவண்யாவின் தற்கொலைக்கு தந்தை மற்றும் மாற்றாந்தாய் தான் காரணம் என காவல் துறை எதிர் கதை கட்டுகிறது. அந்த பெண் தனது மாற்றாந்தாய் மீது எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என்றும் நீதிபதி தமிழக காவல்துறையை குற்றஞ்சாட்டியுள்ளார்.[8]

பொதுமக்கள் ஆதரவு

[தொகு]

லாவண்யா தற்கொலை செய்து கொண்ட செய்தி பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும், மதமாற்றத் தடைச் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடவும், மிரட்டல், ஏமாற்றுதல், பரிசுகள் மற்றும் பண பலன்கள் மூலம் கவர்ந்திழுத்தல் போன்றவற்றின் மூலம் நடக்கும் மோசடி மத மாற்றங்களைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.[9] பாரதிய ஜனதா கட்சியும் இந்த வழக்கின் உண்மைத்தன்மையைக் கண்டறியவும், வாழும் குடும்பத்திற்கு ஆறுதல் அளிப்பதற்காகவும் ஒரு குழுவை அமைப்பதாக அறிவித்துள்ளது.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nath, Akshaya (20 January 2022). "Tamil Nadu student kills self alleging abuse, forced conversion, hostel warden arrested". India Today. https://www.indiatoday.in/india/story/thanjavur-student-kills-self-alleging-abuse-forced-conversion-hostel-warden-arrested-1902307-2022-01-2. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Singh, Anshul (24 January 2022). "ABVP Protests Suicide of Class 12 Student Who Died After Forced Conversion". News18. https://www.news18.com/news/india/abvp-protests-suicide-of-class-12-student-who-died-after-forced-conversion-4694222.html. 
  3. Stalin, J Sam Daniel (21 January 2022). "In Video Before Suicide, Tamil Nadu Schoolgirl Alleged Abuse By Warden". NDTV. https://www.ndtv.com/tamil-nadu-news/tamil-nadu-student-alleges-abuse-forced-conversion-kills-self-2720888. 
  4. "Conversion bid: Tamil Nadu cops probing ‘nun’ cited by 17-year-old girl who died by suicide". Times of India. 22 January 2022. https://timesofindia.indiatimes.com/city/trichy/conversion-bid-cops-probing-nun-cited-by-17-year-old-girl-who-died-by-suicide/articleshow/89048685.cms. 
  5. 5.0 5.1 "Madras HC orders transfer of Thanjavur student death case to CBI". The Week. 31 January 2022. https://www.theweek.in/news/india/2022/01/31/madras-hc-orders-transfer-of-thanjavur-student-death-case-to-cbi.html. 
  6. "அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்". Dailythanthi.com. 2022-01-31. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
  7. "லாவண்யா தற்கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும்:அண்ணாமலை". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/jan/30/lavanya-should-order-cbi-to-probe-suicide-case-annamalai-3783190.html. பார்த்த நாள்: 5 February 2022. 
  8. Fathima, Azeefa (31 January 2022). "Conversion angle not improbable: What Madras HC said on Thanjavur student suicide case". The News Minute. https://www.thenewsminute.com/article/conversion-angle-not-improbable-what-madras-hc-said-thanjavur-student-suicide-case-160421. 
  9. Narasimhan, Anand (1 February 2022). "Lavanya death case: Petition in SC seeks probe into suicide, stringent anti-conversion law". ANI News. https://www.aninews.in/news/national/general-news/lavanya-death-case-petition-in-sc-seeks-probe-into-suicide-stringent-anti-conversion-law20220201130021/. 
  10. Hebbar, Nistula (27 January 2022). "Thanjavur girl death by suicide - BJP sets up committee". The Hindu. https://www.thehindu.com/news/national/thanjavur-girl-death-by-suicide-bjp-sets-up-committee/article38334279.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவண்யா_தற்கொலை_வழக்கு&oldid=3450214" இலிருந்து மீள்விக்கப்பட்டது