லால் பால் ப்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
The three leaders who changed the political discourse of the Independence movement

லால் பால் பால் (லாலா லாஜ்பத் ராய், பால கங்காதர் திலகர் மற்றும் பிபின் சந்திர பால்) ஆகியாோ் 20-ம் நுாற்றாண்டின் முற்பகுதியில்  1905 முதல் 1918 வரை, பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த இந்தியாவில், முற்போக்கு தேசியவாதிகளில் முப்பெரும் குழுவாக இருந்தவா்கள் ஆவா்.  அவர்கள் 1905-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வங்கப் பிரிவினையை எதிர்த்து கிளர்ச்சி செய்து சுதேசி இயக்கத்தை ஆரம்பித்தனா். அனைத்து  இறக்குமதிப் பாெருள்களை புறக்கணிப்பது என்றும், இந்தியப் பாெருள்களை மட்டுமே பயன்படுத்துவது என்றும் வாதம் செய்தனா்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் சில இந்திய அறிஞர்களிடையே ஒரு தீவிர உணர்வை வெளிப்படுத்தியது. இந்த நிலை 1905-ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தின் வாயிலாக அகில இந்திய அளவில் புரட்சி வெடித்தது - இந்த வார்த்தைகளானது  "சுய நம்பிக்கை" அல்லது "தன்னிறைவு" என்பதாகும்.

வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடெங்கிலும் இந்தியர்கள் திரண்டு வந்தனர். வங்காளத்தில் தொடங்கிய பிரிட்டிஷ் பொருட்களின் ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் புறக்கணிப்புகள், ராஜ்யத்திற்கு எதிராக மற்ற பகுதிகளுக்கும் புரட்சிபாேல் பரவியது. தேசியவாத இயக்கத்தின் முக்கிய தலைவரான பால கங்காதர் திலகாின் கைது, பிபின் சந்திர பால்,  அரவிந்தோ கோஷ் ஆகியோரை தீவிர அரசியலில் ஈடுபடச் செய்தது. [1]

மேற்காேள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்_பால்_ப்பால்&oldid=2723241" இருந்து மீள்விக்கப்பட்டது