லால்ரு
லால்ரு | |
|---|---|
| ஆள்கூறுகள்: 30°29′12″N 76°48′02″E / 30.48667°N 76.80056°E | |
| நாடு | |
| மாநிலம் | பஞ்சாப் |
| மாவட்டம் | சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 21,394 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | பஞ்சாபி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 140501 |
| தொலைபேசி குறியீடு | 01762 |
| வாகனப் பதிவு | PB-65,PB-70 |
| அருகமைந்த நகரம் | அம்பாலா, சிராக்பூர் தேரா பாசி |
| எழுத்தறிவு | 90% |
| மக்களவைத் தொகுதி | பட்டியாலா மக்களவைத் தொகுதி |
| சட்டமன்றத் தொகுதி | தேரா பாசி |
லால்ரு (Lalru), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான சண்டிகருக்கு தெற்கே 30.8 கிலோமீட்டர் தொலைவிலும் மொகாலிக்கு தென்கிழக்கே 32.9 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இதனருகே அம்பாலா, சிராக்பூர் மற்றும் தேரா பாசி நகரங்கள் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,093 குடியிருப்புகள் கொண்ட லால்ரு நகரத்தின் மக்கள் தொகை 21,394 ஆகும். அதில் 11,266 ஆண்கள் மற்றும் 10,128 பெண்கள் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.45% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 899 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.56% ஆக உள்ளது. பட்டியல் சமூகத்தவர்கள் 22.26% உள்ளனர். இந்து சமயத்தினர் 83.43%, இசுலாமியர் 1.98%, கிறித்தவர்கள் 0.36%, சீக்கியர்கள் 14.06% மற்றும் பிற சமயத்தினர் 0.17% வீதம் உள்ளனர்.[1]
போக்குவரத்து
[தொகு]தொடருந்து நிலையம்
[தொகு]3 நடைமேடைகள் கொண்ட லால்ரு தொடருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் 10 தொடருந்துகள் கீழ்கண்ட இடங்களுக்கு இயக்கப்படுகிறது.[2][3]
- அம்பாலா
- கால்கா
- சகாரன்பூர்
- தில்லி
- சண்டிகர்
- லக்னோ
- காசியாபாத்
- கர்னால்
- சீரடி
- தௌலத்பூர்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lalru Census Town City Population Census 2011-2025 | Punjab". www.census2011.co.in. Retrieved 2025-05-04.
- ↑ Train routes from Lalru
- ↑ Train routes from Lalru