லால்பாக் அதிவிரைவு தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால்பாக் அதிவிரைவு தொடருந்து
[[படிமம்:
Lalbagh Express
|250px]]
லால்பாக் அதிவிரைவு தொடருந்து
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு
நிகழ்நிலைஇயக்கத்தில் உள்ளது
நிகழ்வு இயலிடம்கர்நாடகா மற்றும் தமிழ்நாடு
முதல் சேவைசூலை 1, 1992; 30 ஆண்டுகள் முன்னர் (1992-07-01)
நடத்துனர்(கள்)முன்னதாக தென்னிந்திய ரயில்வே, தற்போது தென் மேற்கு ரயில்வே துறை
வழி
தொடக்கம்கிராந்திவீரா சங்கொலி ராயண்ணா சந்திப்பு,பெங்களூரூ
இடைநிறுத்தங்கள்22
முடிவு சென்னை சென்ட்ரல் சந்திப்பு
ஓடும் தூரம்746 km (464 mi)
சராசரி பயண நேரம்6 மணி 5 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினந்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்சாசன அமரும் பெட்டிகள், இரண்டாம் வகுப்பு முன்பதிவு வசதி கொண்ட அமரும் பெட்டிகள் மற்றும் முன்பதிவு வசதி இல்லாத அமரும் பெட்டிகள்
இருக்கை வசதிவசதி உண்டு
படுக்கை வசதிவசதி இல்லை
உணவு வசதிகள்வசதி உண்டு
காணும் வசதிகள்LHB Coaches
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇருவழி
பாதைஅகலப்பாதை தொடருந்து
வேகம்60 kilometres per hour (37 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்
Lalbagh Express (MAS - SBC) Route map

லால்பாக் அதிவிரைவு தொடருந்து இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் கிராந்தி வீர சங்கொலி ராயண்ணா தொடருந்து நிலையம் ,பெங்களூரு மற்றும் தமிழகத்தின் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் சென்ட்ரல் தொடருந்து நிலையம்,சென்னை ஆகிய இரு நிலையங்களுக்கு இடையே இயக்கப்படுவதாகும். இந்த தொடருந்து 12607 மற்றும் 12608 என்ற எண்களில் இயக்கப்பட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

1992 ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் பொருட்டு இந்திய ரயில்வே துறையினரால் இந்தத் தொடருந்து இயக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் இந்த தொடருந்து ஆரம்பத்தில் ஒரே ஒரு நிறுத்தத்தில் (காட்பாடி சந்திப்பு)மட்டுமே நிறுத்தப்பட்டு 60 கிலோ மீட்டர் மீட்டர் வேகத்தில் பயணித்து 5 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்னையை சென்றடையும். இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிவிரைவு தொடருந்தாகும். ஆரம்பத்தில் தென்னிந்திய ரயில்வே துறையினரால் இயக்கப்பட்ட இந்த தொடர்ந்து தொடர்ந்து தற்பொழுது தென்மேற்கு ரயில்வே துறையினரால் இயக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்பித்த முதல் மூன்று வருடங்களில் 99.9 சதவீதம் சரியான நேரத்தில் இந்த தொடருந்து பெங்களூருவில் இருந்து சென்னை சென்றடைந்தது சாதனை படைத்தது. மேலும் மொத்த பயண தூரமான 358 கிலோமீட்டரை கிலோமீட்டரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து 5 மணி 15 நிமிடங்களில் சென்னையை சென்றடையும். பின்னர் 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை மைசூர் சதாப்தி அதிவிரைவு தொடருந்து வண்டியின் காரணமாக லால்பாக் அதிவிரைவு தொடருந்து காட்பாடி சந்திப்பில் மட்டுமல்லாது மேலும் பல நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெங்களூரு சென்னை சதாப்தி அதிவிரைவு தொடருந்து காரணமாக மொத்த நிறுத்தங்கள் 11 ஆக அதிகரிக்கப்பட்டு அதிகரிக்கப்பட்டு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பயண நேரமும் 6 மணி 5 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டது.[1]

பெயர்க்காரணம்[தொகு]

பெங்களூரு மாநகரத்தில் உள்ள புகழ்பெற்ற லால்பாக் தாவரவியல் பூங்காவைப் பின்பற்றியே இந்த தொடருந்திற்க்கு லால்பாக் விரைவு தொடருந்து என பெயர் வழங்கப்பட்டது.

சேவைகள்[தொகு]

பெங்களூரு மாநகரத்தில் இருந்து தினமும் அதிகாலை ஆறு முப்பது மணிக்கு இயக்கப்படும் இந்த தொடருந்தில் 24 அமரும் வசதி கொண்ட பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 7 பெட்டிகள் முன்பதிவு செய்யாதவர்களுக்கான அமரும் வசதி கொண்ட பெட்டிகளும், இரண்டு குளிர்சாதன வசதி கொண்ட அமரும் பெட்டிகளும், 12 முன்பதிவு செய்யப்படும் செய்யப்படும் வசதிகொண்ட அமரும் பெட்டிகளும் பெட்டிகளும் கொண்ட இந்த தொடருந்தில் சமையலறை வசதியும் உள்ளது. மேலும் 2 சரக்கு பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு பெட்டிக்கும் 4 தொலைக்காட்சி பெட்டிகள் வீதம் பெட்டிகள் வீதம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு களிக்கவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்தத் தொடருந்தானது தினமும் அதிகாலையில் பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்டு மதியம் 12 மணிக்குள்ளாக சென்னையை வந்தடைவதால் பழங்கள், தின்பண்டங்கள், மற்றும் பூக்கள் போன்றவற்றை இங்குள்ள பயணிகளிடம் விற்பதற்கு பல்வேறு வகையான வியாபாரிகளும், தென்னிந்தியாவின் பல்வேறு நகரங்களை சார்ந்த சார்ந்த மக்களும் இணைந்து காணப்படுவர். எனவே பயணிகளால் ஏழைகளின் சதாப்தி தொடரூந்து எனவும் வியாபாரிகளின் அதி விரைவு தொடருந்து எனவும் தொடருந்து எனவும் அழைக்கப்படும்.

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்[தொகு]

எண் நிலையத்தின் பெயர் (குறியீடு) வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம் கடந்த தொலைவு நாள்
1 பெங்களூர் சந்திப்பு (SBC) தொடக்கம் 06:30 0 0 கி.மீ 1
2 பெங்களூரு கண்டோன்மெண்ட் சந்திப்பு (BNC) 06:40 06:42 2 நிமி 4 கி.மீ 1
3 பங்காருபேட் சந்திப்பு (BWT) 07:33 07:35 2 நிமி 70 கி.மீ 1
4 குப்பம் (KPN) 08:02 08:03 1 நிமி 104 கி.மீ 1
5 ஜோலார்பேட்டை சந்தி்ப்பு (JTJ) 08:44 08:45 1 நிமி 148 கி.மீ 1
6 ஆம்பூர்(AB) 09:08 09:10 2 நிமி 179 கி.மீ 1
7 காட்பாடி சந்திப்பு (KPD) 09:48 09:50 2 நிமி 231 கி.மீ 1
8 வாலாஜா சாலை சந்திப்பு (WJR) 10:08 10:10 2 நிமி 256 கி.மீ 1
9 சோளிங்கூர் (SHU) 10:18 10:20 2 நிமி 271 கி.மீ 1
10 அரக்கோணம் சந்திப்பு (AJJ) 10:43 10:45 2 நிமி 292 கி.மீ 1
11 பெரம்பூர் (PER) 11:33 11:35 2 நிமி 361 கி.மீ 1
12 சென்னை சென்ட்ரல் சந்திப்பு (MAS) 12:15 முடிவு 0 367 கி.மீ 1

வண்டி எண் 12608[தொகு]

இந்த தொடருந்து வண்டியானது கர்நாடக மாநிலம், பெங்களூரு நகர சந்திப்பு நிலையத்தில் இருந்து தினந்தோறும் அதிகாலை 6 மணிக்கு தினந்தோறும் அதிகாலை 6 மணிக்கு இயக்கப்பட்டு தமிழ்நாடு மாநில தலைநகர் சென்னை சென்ட்ரல் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு மதியம் 12.5 மணிக்கு வந்தடைகிறது. அரக்கோணம், காட்பாடிமற்றும் பெங்களூரு கண்டோன்மெண்ட் போன்ற பல்வேறு நகரங்களின் வழியாக செல்லும் இந்த செல்லும் இந்த தொடருந்து 362 கிலோமீட்டர்களை கடக்க 6 மணிநேரம் 5 நிமிடங்கள் ஆகிறது. 11 வழித்தடங்களை கொண்ட இந்த தொடருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் அதி விரைவு தொடருந்துகளில் ஒன்றாகும் . உட்காரும் வசதி மட்டுமே கொண்ட இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்மேற்கு ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும். இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.

GC - UR - C1 - C2 - D1 - D2 - D3 - D4- PC - D5 - D6 - D7 - D8 - D9 - D10 - D11 - 2S - UR - UR - GC

வண்டி எண் 12607[தொகு]

இந்த தொடருந்து வண்டியானது புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து தினமும் மதியம் 3.15 மணிக்கு இயக்கப்பட்டு கர்நாடக மாநிலம் கிராந்தி வீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்திற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது. அரக்கோணம், ஜோலார்பேட்டை, ஆம்பூர் காட்பாடிமற்றும் பெங்களூரு கண்டோன்மெண்ட் போன்ற பல்வேறு நகரங்களின் வழியாக செல்லும் இந்த செல்லும் இந்த தொடருந்து 362 கிலோமீட்டர்களை கடக்க 6 மணிநேரம் 5 நிமிடங்கள் ஆகிறது. 11 வழித்தடங்களை கொண்ட இந்த தொடருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் அதி விரைவு தொடருந்துகளில் ஒன்றாகும் . உட்காரும் வசதி மட்டுமே கொண்ட இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்மேற்கு ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும். இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.

GC - UR - UR - 2S - D11 - D10 - D9 - D8- D7 - D6 - D5 - PC - D4 - D3 - D2 - D2 - C2 - C1 - UR - GC

மேற்கோள்கள்[தொகு]

  1. Lalbagh Express, first high-speed Chennai-Bengaluru train, chugs into its 28th year