லாலுபாய் பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லாலுபாய் பாபுபாய் பட்டேல், (Lalubhai Babubhai Patel, பிறப்பு: 31 ஆகத்து 1955) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார். அந்தக் கட்சியின் வேட்பாளராக 2009ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கான மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதினைந்தாவது மக்களவையில் அங்கம் வகித்தார். பின்னர், இதே தொகுதியில் 2014ஆம் ஆண்டில் போட்டியிட்டு, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1][2][3]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலுபாய்_பட்டேல்&oldid=3531164" இருந்து மீள்விக்கப்பட்டது