லாலா லஜபதிராய் கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம்
Appearance
லாலா லஜபதிராய் கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் (Lala Lajpat Rai University of Veterinary and Animal Sciences) அரியானா மாநிலத்தில் ஹிசர் பகுதியில் அமைந்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரான லாலா லஜபதிராயின் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.
வரலாறு
[தொகு]இந்தக் கால்நடை அறிவியல் கல்லூரியானது 1948ஆம் ஆண்டு லாகூரில் இருந்து ஹிஷார்க்கு மாற்றப்பட்டது. 1971ஆம் ஆண்டு சௌத்ரி சரன் சிங்க் ஹரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்தது. இந்தப் பல்கலைகழகம் சிசிஎஸ் என்ற வளாகத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டுவருகின்றது. ஹரியனா அரசாங்கம், ஹிஸர் - சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை மீது 300 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது.
கல்வி
[தொகு]கால்நடை மற்றும் விலங்கு அறிவியலின் இளங்கலை பட்டப்படிப்பும், முதுகலை பட்டப்படிப்பும் இங்கு அளிக்கப்படுகிறது.
உசாத்துணை
[தொகு]- அதிகாரபூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2012-04-23 at the வந்தவழி இயந்திரம்