லாரா ரைட்
லாரா ரைட் | |
---|---|
![]() | |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கர் |
பணி | ஆங்கிலப் பேராசிரியர், மேற்கு கரோலினா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நனிசைவவியல் துறையைத் தோற்றுவித்தவர் |
கல்விப் பின்னணி | |
கல்வி நிலையம் | மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகம் |
கல்விப் பணி | |
துறை | இலக்கியம் |
Notable works | தி வீகன் ஸ்டடீஸ் ப்ராஜக்ட்டு (2015) |
லாரா ரைட் (Laura Wright) ஒரு ஐக்கிய அமெரிக்க நனிசைவ அறிஞரும் மேற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியரும் ஆவார். இவர் நனிசைவ ஆராய்ச்சிப் படிப்பினை நனிசைவவியல் என்ற ஒரு புதிய கல்வித் துறையாக முன்மொழிந்தவர் ஆவார். இவர் 2015-ம் ஆண்டு பதிப்பித்த தி வீகன் ஸ்டடீஸ் பிராஜக்ட்டு என்ற நூல் இத்துறையின் அடிப்படை நூலாக உருமாறியது. 2021-ம் ஆண்டு நிலவரப்படி, நனிசைவ ஆய்வுகள் பற்றிய இரண்டு கட்டுரைத் தொகுப்புகளை இவர் திருத்தி வெளியிட்டுள்ளார்.
கல்வி
[தொகு]ரைட் 1992-ம் ஆண்டு அப்பலாச்சியன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும்,[1] 1995-ம் ஆண்டு கிழக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும்,[2] 2004-ம் ஆண்டு மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பின்காலனித்துவ இலக்கியம் மற்றும் உலக இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]
ஆதிக்கத் துறைகள்
[தொகு]நனிசைவ ஆய்வுகளுக்கு மேலதிகமாக, பிந்காலனித்துவ இலக்கியம் மற்றும் கோட்பாடு, தென்னாப்பிரிக்க இலக்கியம், சுற்றுச்சூழல் திறனாய்வு, விலங்கு ஆய்வுகள், மற்றும் உணவு ஆய்வுகள் ஆகியவற்றிலும் ரைட் கவனம் செலுத்தி வருகிறார்.
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]- வட கரோலினா பல்கலைக்கழகத்தின் சிறந்த கற்பித்தலுக்கான ஆளுநர் வாரிய விருது (2018)[4]
- தேசிய மனிதவியல் மைய பெல்லோஷிப் (2012)[2]
- பெண்ணிய பாண்டித்தியத்திற்கான நவீன மொழி சங்கத்தின் புளோரன்ஸ் ஹோவ் விருது (2008)[5]
படைப்புகளும் பதிப்புகளும்
[தொகு]- (2021) ed. The Routledge Handbook of Vegan Studies. London: Routledge.[6]
- (2019) ed. Through a Vegan Studies Lens: Textual Ethics and Lived Activism. Reno: University of Nevada Press.[7][8]
- (2015) The Vegan Studies Project: Food, Animals, and Gender in the Age of Terror. Athens: University of Georgia Press.[9]
- (2014) with Jane Poyner and Elleke Boehmer, eds. Approaches to Teaching Coetzee's Disgrace and Other Works. New York: The Modern Language Association of America.[9]
- (2013) with Elizabeth Heffelfinger. Visual Difference: Postcolonial Studies and Intercultural Cinema. New York: Peter Lang.[9]
- (2010) Wilderness into Civilized Shapes: Reading the Postcolonial Environment. Athens: University of Georgia Press.[9]
- (2006) Writing Out of All the Camps: J. M. Coetzee's Narratives of Displacement. New York: Routledge.[9]
மேற்கோள் தரவுகள்
[தொகு]- ↑ "Author of 'The Vegan Studies Project' returns to alma mater". Wautaga Democrat. 21 March 2016. Archived from the original on 19 March 2020. Retrieved 20 December 2018.
- ↑ 2.0 2.1 "Laura Wright". Western Carolina University. Archived from the original on 19 March 2020. Retrieved 20 December 2018.
- ↑ "Laura Wright". Western Carolina University. Archived from the original on 29 December 2018. Retrieved 20 December 2018.
- ↑ "Wright Named One of Top Teachers in UNC System". Western Carolina University. Aug 23, 2018 இம் மூலத்தில் இருந்து 5 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190105042757/https://news-prod.wcu.edu/2018/08/wright-named-one-of-top-teachers-in-unc-system/.
- ↑ "WCML Award Winners". Women's Caucus for the Modern Languages. Archived from the original on 4 January 2019. Retrieved 4 January 2019.
- ↑ The Routledge handbook of vegan studies. Wright, Laura, 1970-. Abingdon, Oxon. 2021. ISBN 978-0-367-89746-8. கணினி நூலகம் 1198974799. Archived from the original on 2021-01-19. Retrieved 2021-01-02.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link) - ↑ Laura Wright (2019). Through a Vegan Studies Lens: Textual Ethics and Lived Activism. University of Nevada Press. ISBN 978-1-948908-11-5. Archived from the original on 2021-01-19. Retrieved 2019-03-13.
- ↑ "Through a Vegan Studies Lens: Textual Ethics and Lived Activism". Brooks Institute. Archived from the original on 2021-01-19. Retrieved 2021-01-19.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 "Laura Wright". Amazon. Archived from the original on 19 January 2021. Retrieved 4 January 2019.