உள்ளடக்கத்துக்குச் செல்

லாரல் அப்பார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாரல் ஹப்பார்ட்
தனிநபர் தகவல்
தேசியம்நியூசிலாந்து
பிறப்பு9 பிப்ரவரி 1978 [1]
ஆக்லாந்து[2]
ஆண்டுகள் செயலில்1998–தற்போது வரை
விளையாட்டு
நாடுநியூசிலாந்து
விளையாட்டுஒலிம்பிக் பாரம் தூக்கும் போட்டி
பதக்கத் தகவல்கள்
உலக பாரம் தூக்கும் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2017 உலக பாரம் தூக்கும் போட்டி, பெண்கள் பிரிவு +90 கிலோ
பசிபிக் விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 பசிபிக் விளையாட்டுப் போட்டிகள் +87 கிலோ

லாரல் ஹப்பார்ட் (Laurel Hubbard) (பிறப்பு: 9 பிப்ரவரி 1978) நியூசிலாந்து நாட்டின் பாரம் தூக்கும் விளையாட்டு வீரர் ஆவார்.[3]கொரனா பெருந்தொற்று காரணமாக, 2021-ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில், திருநங்கை மாறிய இவர் பெண்கள் அணியில் 87 கிலோ எடைப்பிரிவில் பாரம் தூக்கும் விளையாட்டில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[4] மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.[5] டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்களின் 87 கிலோ கிராம் பிரிவில் லாரல் ஹப்பார்ட் போட்டியிட உள்ளார்.

ஒலிம்பிக் விதிகளில் மாற்றம்

[தொகு]

டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன், ஒருவரது உடலில் தசைகளின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது. இவருக்கு டெஸ்டோஸ்டிரோன் சுரப்பின் அளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் குறைவாக இருந்ததால், ஆண் திருநங்கை விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் போட்டியிட அனுமதிக்கும் வகையில், 2015ஆம் ஆண்டில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு தனது விதிகளை மாற்றியமைத்தது. அதன்படியே தற்போது 43 வயதான லாரல் ஹப்பார்ட் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இதனால் சூலை 2021-ஆம் ஜப்பான் நாட்டின் தலைநகரம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் இவர் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரல்_அப்பார்டு&oldid=3914840" இலிருந்து மீள்விக்கப்பட்டது