லாம்பர்ட் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளியியலில், லாம்பர்ட் விதி (Lambert's law) அல்லது லாம்பர்ட்டின் கொசைன் விதி (Lambert's Cosine law) என்பது ஒளிக்கதிர்கள் ஒரு பரப்பில் சாய்வாக விழும் போதுள்ள ஒளிச்செறிவினை காண உதவும் விதியாகும். செங்குத்தாக ஒளிக்கதிர்களைப் பெறும் ஒருபரப்பில் ஒளிர்வுச் செறிவு, ஒளிரும் பொருளுக்கும் அதனைப்பெறும் பரப்பிற்குமுள்ள தூரத்தின் இருமடிக்கு எதிர் விகிதத்தில் இருக்கும். ஒளிக்கதிர்கள் அப்பரப்பில் சாய்வாக விழும் போது ஒளிர்வுச் செறிவானது ஒளிக்கதிருக்கும் பரப்பில் வரையப்படும் செங்குத்துக் கோட்டிற்கும் இடையேயுள்ள கோணத்தின் கொசைன் (Cosine) மதிப்பிற்கு நேர்வீதத்தில் இருக்கும்.[1][2] இவ்விதி கொசைன் உமிழ் விதி (cosine emission law)[3] அல்லது லாம்பர்ட்டின் உமிழ் விதி எனவும் அழைக்கப்படுகிறது. 1760 ஆம் ஆண்டில் போட்டோமெட்ரியா என்ற நூலை வெளியிட்ட யொகான் ஐன்ரிக்கு லாம்பர்ட்டின் நினைவாக இவ்விதிக்கு லாம்பர்ட் விதி என பெயரிடப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாம்பர்ட்_விதி&oldid=3812555" இருந்து மீள்விக்கப்பட்டது